பலிப்பீடம்:-
பலிப்பீடத்தை மிகவும் அச்சநடுக்கத்தோடு வணங்கினார்கள். பொதுநிலையினர் தேவையின்றி பீடத்தில் ஏறுவதில்லை.பெண்கள் பீடத்தில் கண்டிப்பாக ஏறக்கூடாது.குருக்கள் பீடத்தைபார்த்தப்படி பயபக்தியுடன் பலி ஒப்புகொடுத்தார்கள். அதிக இரைச்சல்,ஆடம்பர இசை,கும்ப வரவேற்பு,ஆரத்தி எடுப்பது ,முன்னுரைகள் படிப்பது ஆகியவை இல்லை. பலீபீடத்தில் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழ்வதில்லை, வேறு யாருக்கும் அது ஆயராகயிருந்தாலும் பொன்னாடை போர்த்துவது, கை தட்டுவது ஆஹா ஓஹொ என புகழ்வது கிடையாது.
திவ்யநற்கருணை:-
நற்கருணையை பயபக்தியுடன் முழங்காலில் நின்று நாவில் வாங்கினார்கள் குரு நற்கருணை வழங்குகிற போது ஒரு சீக்ஷன் நற்கருணை துகள்கள் கீழே விழுந்துவிடாதபடி தட்டு பிடிக்க, இன்னொரு சீக்ஷன் நற்கருணை ஆண்டவரின் இறைத்தன்மையை வெளிபடுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கிறார்.கடின நோயாளிகளுக்கு அவஸ்தை கொடுப்பதற்காக நற்கருணை பாத்திரத்துடன் குரு செல்வதை பார்த்தாலே,அந்த இடத்திலேயே முட்டி போட்டு நற்கருணையையும், குருவையும் வணங்குமளவிற்கான இறைமக்களின் விசுவாசம்.
பாவசங்கீர்த்தனம்:-
ஒவ்வொரு வாரமும் பாவசங்கீர்த்தனம் செய்தபிறகே ஞாயறு திருப்பலியில் பங்கு கொண்டு நற்கருணை ஆண்டவரை பயபக்தியுடன் வாங்கினார்கள்.
செபமாலை:-
அன்றைைய மாதா பக்தி என்பது மாதாவுக்கு ஆடம்பர விழா எடுப்பதாகவோ, லட்சகணக்கான பணச்செலவில் ஆடல்பாடல், வானவேடிக்கை வைப்பதாகவே,அன்பின் விருந்து என்ற போர்வையில் ஆடம்பர கிடா விருந்தோ அல்லது மாதாவுக்கு ஆடை அணிகலன்கள் அணிவதாகவோ இருந்ததில்லை மாறாக மாதாவின் பிள்ளைகள் குடும்பமாக, தனியாக, குழுக்களாக தினமும் அதிகதிமான செபமாலையை பாத்திமாவில் அன்னை கேட்டுக்கொண்டபடி ஒப்பு கொடுத்தார்கள்.
இன்றைய நவீன திருச்சபையின் உலகு சார்ந்த போக்குகள் மறைந்து, பாரம்பர்ய திருப்பலி மற்றும் வழிபாடுகள் மீண்டும் திருச்சபையில் நடைபெற வேண்டும்.