நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே!
மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே!
உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.
தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன்.
எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.
திருக்கன்னி மரிதாயின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே!
உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும்.
நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.
சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே! – ஆமென்.