"பிலோமினா" என்றால் ஒளியின் மகள் என்று பொருள்..
கீரேக்க குறுநில மன்னனின் மகள் இளவரசி பிலோமினா..
இவர் பெற்றொருக்கு குழந்தை இல்லாததால் பல விதமான பேய் வழிபாடுகளை செய்து கொண்டிருந்த போது ஒரு கிறிஸ்தவ மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டு கிறிஸ்தவர்களானார்கள்.. அப்போது அவர்களோடு சேர்ந்து நிறைய பேர் கிறிஸ்தவர்களனார்கள்..
ஒளியின் மகள் உதித்தாள் அடுத்த பத்தாவது மாதத்தில்.. கிறிஸ்துவின் ஒளி அவள் ஆன்மாவில் இருந்தது..
ஐந்தாம் வயதில் புது நன்மை… அப்போதே கிறிஸ்து இயேசுவுக்காக அர்ப்பணம் உதயமானது..
அவள் 11-ம் வயதில் கன்னிமையை கிறிஸ்துவுக்காக தியாகம் செய்து கிறிஸ்துவை மணாளனாக தேர்வு செய்து வார்த்தைப்பாடு கொடுத்தாள்..
பதிமூன்றாம் வயதில் குடும்பத்தில் சமாதானம் கலைந்து தியோக்ளிஷனால் பிரச்சனை வந்தது..
அவனது படையெடுப்பை.. தாங்க முடியாமல்..கப்பம் கட்டுவது என்று முடிவெடுத்த மன்னன் தன் மகளோடு சமாதானத்திற்கு சென்ற போது… உரோமைச் சக்கரவர்த்தி உலகச் சக்ரவர்த்தி தியோக்ளேஷியனின் பார்வை பிலோமினாவின் மேல் விழுந்தது..
நீ கப்பம் கட்ட வேண்டாம் உன் மகளை எனக்கு மனைவியாக தந்துவிடு என்று மன்னன் சொல்ல அவள் பெற்றோர் மகிழ பிலோமினா மறுக்க பிரச்சனை வில்லங்கமானது..
பாசமான பெற்றோர் அவளைக் கை கழுவ.. மன்னன் மனமுடிக்க முயல இயேசுவுக்காக உரோமைச் சக்ரவர்த்தியையும், உலகுக்கே இராணியாகும் அந்தஸ்தஸ்தையும் தூக்கி எரிந்தாள் நம் ஒளியின் சுடர் பிலோமினா..
13- வயதில் வேதகலாபனை அரங்கேறியது..
மணவாளன் இயேசுவைப்போல் அவளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது..
தைபர் நதியில் நங்கூரத்தைக் கட்டி தூக்கி எரியப்பட்டாள்..
அம்பு மழை பொழியப்பட்டாள்..
இரத்த வெள்ளத்தில் சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டபோதெல்லாம்.. இயேசு ஆண்டவர் அவளை வானதூதரை அனுப்பி காப்பாற்ற..
இறுதியாக பாதாள இருட்டுச் சிறைக்குள் ஒரு வேளை மட்டும் உணவோடு 40 நாட்கள் அவஸ்தையோடு தள்ளப்பட..
அவள் எல்லாச் சூழ்நிலையிலும் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும், இயேசு ஆண்டவருக்கும் தன்னை ஒப்புக்கொடுக்க..
37- ம் நாளில் தேவமாதா பாலன் இயேசுவோடு காட்சி கொடுத்து அவளைத் திடப்படுத்தி வேத சாட்சியத்திற்கு தயாரிக்க 40 -ம் நாளுக்கு பிறகு மீண்டும் பலவித உபாதைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் இரத்தம் சிந்தி வேதசாட்சியாக மரித்தாள்..
அவள் வேத சாட்சியாக மரித்த ஆண்டு கி.பி. 270.. சுரங்க கல்லறையில் மறைந்திருந்த புனித பிலோமினம்மாளின் இரத்தமும், எலும்புகளும்.. 1500 ஆண்டுகளுக்குப் பின் மகிமையாக வெளிப்பட கி.பி. 19 – நூற்றாண்டில் மீண்டும் உலகுக்கு தெரியப்படலானாள்..
துடிப்போடு ஏராளமான புதுமைகளை ஒளியின் மகளான பிலோமினா செய்ய.. பாப்பரசரால் புனிதையாக அறிக்கையிடப்பட்டு பலவித அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டது..
இளைஞர்களின் பாதுகாவலி..
மரியாயின் பிள்ளைகளின் பாதுகாவலி..
வாழும் ஜெபமாலை இயக்கத்தின் பாதுகாவலி.. என்று
அடுத்தடுத்த மேன்மைக்கு பிலோமினா எடுத்துச் செல்லப்பட்டாள்..
இன்றும் பல புதுமைகளை எப்போதும் செய்து வருகிறார்..
“ இந்த பரிசுத்தமான குரல் பரலோகத்தில் மறுக்கப்படுவதுல்லை “ என்று பல புனிதர்களாலும், மக்களாலும் சொல்லப்படும் அளவிற்கு புதுமைகளின் சிகரமாகத் திகழ்கிறாள்..
புனித பிலோமினம்மாளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே பாடம்.. "வீர வைராக்கியத்தோடு ஆண்டவர் இயேசுவை பின் செல்வது. அவருக்காக எதையும் தூக்கியெரிய தயங்காத மனநிலை"
ஓ ! பிலோமினம்மாளே ! ஒளியின் மகளே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !