அமல உற்பவம்..
கடவுளின் அளப்பரிய கொடை..
யாருக்குமே கொடுக்கப்பட்டிராத கொடை..
மனிதன் தோன்றியது முதல் இன்று வரை
ஆதாம் ஏவாளைத் தவிர வேறு யாருக்கும் (அவர்கள் பாவம் செய்யாத வரை அந்த வரம் அவர்களோடு இருந்தது) கொடுக்கப்பட்டிராத கொடை..
புதிய ஏவாளுக்கு தேவைப்பட்ட கொடை..
கடவுளின் தாயாருக்கு தேவைப்பட்ட கொடை..
அலகையை வெற்றிக்கொள்ள மாதாவுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு கொடை..
கடவுளுக்கு தேவைப்பட்டதால் மாதாவுக்கு கொடுக்கப்பட்ட கொடை..
மனுக்குலத்தில் மாதாவுக்கு வழங்கப்பட்ட தனிச்சலுகை இந்த மாபெரும் கொடை.
உயிர் வாழ்வோர் எல்லாருக்கும் தாயாராக ஆவதற்கு உற்பவிக்கும் போதே தேவ மாதாவுக்கு வழங்கப்பட்ட தனிக் கொடை.
ஆண்டவர் இயேசுவின் திருஇரத்த மீட்பு மாதாவுக்கு மட்டும் முன்னதாக உற்பவிக்கும் முன்பே வழங்கப்பட்ட மாபெரும் கொடை..
மாதாவை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சி ..
மாதாவை நினைத்தாலே ஒரு அக்களிப்பு...
மாதாவை நினைத்தாலே ஒரு பெருமை..
மாதாவை நினைத்தாலே ஒரு சந்தோசம்..
மாதாவை நினைத்தாலே ஒரு பேரன்பு..
மாதாவை நினைத்தாலே ஒரு தெம்பு..
மாதாவை நினைத்தாலே ஒரு நம்பிக்கை..
மாதாவை நினைத்தாலே ஒரு பாதுகாப்பு..
மாதாவின் மாசற்ற இருதயத்தை நினைத்தால் ஒரு பேருவுவகை..
மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நம்மையும், நம் குடும்பத்தையும் ஒப்புக் கொடுத்தால் ஒரு நிம்மதி..
மாதாவிடம் ஜெபமாலை ஜெபிக்கும்போது ஒரு சந்தோசம், நம்பிக்கை, பாதுகாப்பு, ஒரு நிறைவு..
ஒவ்வொரு நாளிலும் ஜெபமாலை ஜெபித்து விட்டால் இன்றைய நாளை மாதா பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதி..
மாதாவை நினைத்தாலே ஒரு தாய்மையின் உணர்தல்.. தாயன்பின் உணர்தல்..
இன்று நம் தாயை நன்றியோடு நினைவு கூர்வோம்..
ஜெபமாலை ஜெபித்து நன்றி கூறுவோம்..
நம் மீட்புக்காக ஆண்டவர் இயேசுவோடு ஒத்துழைத்து, உழைத்து, அவரோடு இணைந்து பாடுபட்டு நாம் மோட்சம் சேர உதவி செய்த நம் நேச தாய்க்கு நன்றி கூறுவோம்..
நம் மீட்புக்காக இன்றுவரை அலகையோடு போராடிக் கொண்டிருக்கும் நம் அன்புத் தாய்க்கு நன்றி கூறுவோம்..
கடவுளின் தூதுவராக இன்று வரை நமக்கு பல தன் காட்சிகள் மூலம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் தாய்க்கு நன்றி கூறுவோம்...
நாம் மோட்சம் செல்ல தன் காட்சிகள் மூலம் நமக்கு பல எளிய வழிகளைக் கற்றுத்தந்த நம் ஆசானான நம் தாய்க்கு நன்றி கூறுவோம்..
நம் தாயின் போராட்டம் உலகம் முடியும் வரை தொடரும்..
அதற்கு நாம் ஜெபமாலை ஜெபித்து, ஜெப தவ பரிகாரங்கள் செய்து நம் தாய்க்கு உதவி செய்வோம்..
இன்றைய இறை இரக்கத்தின் நேரமான பகல் 12 முதல் 1 மணி வரை உள்ள நேரத்தில் வழக்கம் போல் உலக தேவைகளைக் கேட்காமல் ஆன்ம தேவைகளைக் கேட்போம்..
பாவத்தில் இருந்தும், பாவ சூழ்நிலையில் இருந்தும் விடுதலை பெற தேவையான ஆற்றலைக் கேட்போம்..
பரிசுத்தம்தான் நிலையான செல்வம், சொத்து..
அந்த பரிசுத்தம் நம்மிடம் இருந்தால் நாம் கடவுளிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
நமக்கும், நம் குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பு கிடைக்கும்..
தற்கால மகிழ்ச்சி அல்ல நிரந்தர மகிழ்ச்சி கிடைக்கும்..
எந்த சூழ்நிலை, எந்த போராட்டம், எந்த நெருக்கடி, எந்த இன்னல்கள் மத்தியிலும் கவலை இல்லாமல் வாழலாம்..
அதுபோல இறை இரக்கத்தின் நேரத்தில் நம் தாய் வீடான மோட்சத்தை நமக்கு தரவேண்டும் என்று கேட்போம்..
அதை முன்னதாக முன் பதிவு செய்வோம்..
தற்காலிக மகிழ்ச்சிகளை தள்ளிவிட்டு நிரந்தர நித்திய மகிழ்ச்சியான மோட்சத்தை சொந்தமாக்க உழைப்போம்..
ஆண்டவர் இயேசு சொல்லியபடி,
"விண்ணரசை முதலில் தேடுங்கள் மற்ற அனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்"
என்பது போல விண்ணரசை முதலில் தேடுவோம்..
"ஜென்ம மாசில்லா மாதரசி !
செம்மைசேர் மங்கையர் ராணி நீ !
பாவமேது இல்லா சீலி !
பாவிகளின் செல்வ ராணி !
பாதுகாத்து ஆளுவாயே நீ!
வான்லோக ராணி!
வையக ராணி!
மண் மீதிலே புனித மாது நீ!