கேன்ட்டர்பரியின் புனித தாமஸ், அன்னையின் மேல் கொண்ட அன்பினால் மறைசட்சியாய் மரித்தார்.

 கேன்ட்டர்பரியைச் சேர்ந்த புனித தாமஸ், இளைஞனாக இருந்தபோது ஒருநாள் அவரது வயதையொத்த அவரது நண்பர்கள் தங்களது காதலியரைப் பற்றி ஒருவோருக்கொருவர் தற்புகழ்ச்சியுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டார். நமது புனிதர், பரிசுத்த கன்னி மரியாளை மனதில் கொண்டு  அவர்களிடம் தானும் ஒரு அழகிய பெண்ணும் ஒருவோருக்கொருவர் விரும்புவதாக கூறினார். 

அதன்பின்னர் தான் அன்னையை இவ்வாறு தனது நண்பர்களிடம் தற்பெருமையாக கூறியது குறித்து மனவருத்தம் கொண்டார். 

ஆனால் அதோ, நமதன்னை அவருக்கு தோன்றி, கருணை நிறந்த புன்னகையுடன், ”தாமஸ், எதற்காக பயப்படுகிறாய்? நீ என்னை விரும்புவதாக கூறுவதற்கு காரணங்கள் உள்ளன அதைப்போன்று நானும் உன்னை விரும்புகிறேன். உனது நண்பர்களிடம் இதனை உறுதிப்படுத்து, நான் உன்மேல் கொண்ட அன்பின் அடையாளமாக, நான் உனக்காக உருவாக்கிய இந்த பரிசினை அவர்களிடம் காட்டு” என்று கூறினார்கள். 

அந்த சிறிய பெட்டியில், அவருக்குப் பரிசாக அன்னை அவர்மேல் கொண்ட அன்பின் அடையாளமாக, திருப்பலியின் போது குருவானவர் அணியும் மேலங்கி இரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்தது. இதன் மூலம் அன்னை அவருக்கு ஒரு குருவாகவும், மறைசாட்சியாகவும் ஆகும் அருள்வரத்தை பெற்றுத் தந்தார். பின்னாளில், அது உண்மையில் நிகழ்ந்தது.    

முதலில் குருவாகவும், பின்னர் இங்கிலாந்தில் உள்ள கேன்ட்டர்பரியின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். ஒருமுறை அரசானால் மிகவும் துன்புறுத்தப்பட்டு, பிரான்சில் உள்ள போண்டினக் நகரின் சிஸ்டேர்சியன் துறவியர் மடத்தில் தஞ்சம் புகுந்தார். 

அவர் அங்கிருந்த வேளையில், வழக்கமாக அவர் அணியும் மேலங்கியின் தலையை மூடக்கூடிய பகுதியில் இருந்த கிழிசலை சரி செய்ய முயன்றார். ஆனால் அவரால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. அப்போது அவரது அன்பின் அரசி அவருக்குத் தோன்றி, மிகவும் இரக்கத்துடன் அவரிடமிருந்து அதனை வாங்கி சரி செய்து கொடுத்தார்கள். 

இதன்பின்னர் அவர் கேன்ட்டர்பரிக்கு திரும்பி மிகவும் ஆர்வத்துடன் திருச்சபைக்காக பணியாற்றியதால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார்.

*****சிந்தனை******

இந்த மே 13 மாதம் பாத்திமா அன்னையின் 100 வது ஆண்டு தினமும் ஜெபமாலை ஜெபிப்போம் அன்ணையின் உதவியோடு விண்ணக வாழ்வை பெருவோம் 

 நமதன்னையின் மேல் தணியாத அன்பு கொண்டு, அவருக்காகவே வாழ்ந்து, அவர் வழியாக, இம்மையிலும் மறுமையிலும் நமதாண்டவரின் அருளிரக்கம் பெற்று அவரின் பாதங்களைச் சேர்வதற்காக மன்றாடுவோமாக!!!!

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!