செபமாலை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு அருளப்பட்ட காட்சியின் வழியாக மனம் திரும்பினார்

உயர்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதிதாக ஆரம்பித்த ஒரு செபமாலை குழுவுக்கு தனது அதிகாரத்தைப்  பயன்படுத்தி  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

ஆனால்  ஒருநாள் இரவு செபிக்கும் போது தனக்கு   அருளப்பட்ட  காட்சியின் வழியாக மனம் மாறினார்.

தன்னை மறந்து பரவசமான நிலையில், மிகவும் பிரகாசமான ஒளியால் சூழப்பட்டு எண்ணிக்கையிலடங்கா  ஆண்களும்  பெண்களும், பக்தியுடன் செபமாலை செபிப்பதைக் கண்டார். 

அவர்கள், ஒவ்வொரு முறையும் "அருள் நிறை மரியே வாழ்க" என்று செபிக்கும் போது, அவர்களது வாயிலிருந்து மிக அழகான ஒரு விண்மீன் வெளியில் வருவதைக் கண்டார். அவர்களுடைய செபங்கள் அனைத்தும் தங்க எழுத்துக்களாலான ஒரு புத்தகத்தில் எழுதப்படுவதைக் கண்டார்.

அப்போது பரிசுத்த கன்னி மாமரி அவளிடம்," இந்த புத்தகத்தில் என்னுடைய  செபமாலை செபிக்கும் சகோதர சகோதரிகளுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, ஆனால் அநேகம் பேரை செபமாலை பக்திக்குள் வரவிடாமல் செய்ததால், உனது பெயர் எழுதப்படவில்லை. இன்னும் கொஞ்ச காலம் உனது உடல்நிலை சரி இல்லாமல் போகும், அது உனது ஆன்மாவின் மீட்பாக முடியும்" என்று மொழிந்தார்கள். 

கொஞ்ச காலத்திலேயே அவள் நோய்வாய்ப்பபட்ட போது, தனக்கு முன்னறிவிக்கப் பட்ட உண்மையை உணர்ந்து, உடல் நிலை தேறி வரும் போது செபமாலைக்குழுவில் உறுப்பினராக தானும் சேர்ந்து கொண்டாள்.    

****சிந்தனை***

நாமும் நமது பாவ இருளை அகற்றி, செபமாலை செபித்து, அன்னையின் பரிந்துரையான செபம், தவம், பரிகாரங்கள் செய்து, அன்னையின் உதவியால், எல்லாம் வல்ல இறைவனை அடைவோமாக.