அருளாளர் பீட்டர் கொன்ஸாலெஸ் ஒரு "கேஸ்டிலியன் டொமினிக்கன் துறவியும் குருவும் (Castilian Dominican Friar and Priest) ஆவார்.
புனிதர் பவுல் (Saint Paul) அவர்களுக்கு ஒருமுறை "டமாஸ்கஸ்" (Damascus) பயணிக்கும் பாதையில் மனமாற்றத்திற்கான அனுபவம் கிட்டியது. கிட்டத்தட்ட அதேபோன்றதோர் அனுபவம் பல வருடங்களின் பின்னர் அருளாளர் பீட்டருக்கும் கிட்டியது. கி.பி. 13ம் நூற்றாண்டில் ஒருநாள், பீட்டர் ஸ்பேனிஷ் நகரான "அஸ்டோர்கா'வில்" (Astorga) தமது முக்கிய பேராலய பதவியொன்றினை பெறும் பொருட்டு, தமது குதிரையை வேகமாக தட்டிவிட்டு பறந்துகொண்டிருந்தார். இடறி விழுந்த குதிரை, பீட்டரை சேற்றில் தள்ளிச் சென்றது. வழிப்போக்கர்கள் வேடிக்கை பார்த்திருந்தனர்.
"அஸ்டோர்கா" (Astorga) நகர ஆயராக (Bishop of Astorga) இருந்த தமது தாய்மாமனிடம் பீட்டர் கல்வி கற்றார். மிக இள வயதிலேயே பீட்டருக்கு ஆயர் ஆலய பதவியளித்தார். மறு மதிப்பீடு செய்யப்பட்டு அவருக்கு பணி வழங்கப்பட்டது.
பின்னர், பீட்டர் "டொமினிக்கன்" சபையில் (Dominican Order) இணைவதற்காக தமது தேவாலய பணியை விட்டார். பீட்டர் பிரபலமான போதகராக மாறினார். அவரது மறையுரைகளைக் கேட்க மக்கள் கூட்டம் குறையாமல் வந்தது. எண்ணற்றோரை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றினார்.
பீட்டர் நீதிமன்ற போதகராக அதிக காலம் பணியாற்றினார். அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் ஸ்பெயின் நாட்டின் வட மேற்குப் பிராந்தியங்களில் மறை பரப்பு பணியாற்றினார். ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீசிய மாலுமிகளுக்காக (Spanish and Portuguese seamen) தனியாக பணிக்குழுக்களை உருவாக்கினார்.
கி.பி. 1246ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 15ம் நாளன்று, "டுய்" (Tui) என்ற இடத்தில் மரித்த பீட்டர், உள்ளூர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.