புனித அந்தோணியாரின் புதுமைகள்!

அர்ச்  அந்தோணியார் வாழும் போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார் . அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது.  இனி நாம் அவருடைய புதுமைகளை பார்போம் .

அர்ச்  அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1.  அர்ச்  அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.

            அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.

2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.

             1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.

சிறுவயதில் 

     அர்ச் அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் பூசை செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை  எல்லாம்

அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காண வில்லை. தந்தைக்கு கோபம். ஆனால்  அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.

குருமடத்தில்  

அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே  இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே  இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.

தப்பறைகளின் சம்மட்டி  

அந்தோணியார் தப்பறைகளுக்கு ஒரு சம்மட்டியாகவே இருந்தார். அதில் முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்போம் ..

1.மீன்களுக்கு போதித்தல் ..........

 அந்தோணியார் ஒரு மிக பெரிய போதகராக இருந்தாலும் அவரால் எல்லா நேரமும் மக்களை சர்வேசுரனுடைய வாக்கியத்திற்கு செவி கொடுக்க வைக்க இயலவில்லை. ஒரு நேரம் Rimini நகரிலே போதிக்க சென்றார். அங்கே   ஒரு பதிதர்கள் அவர்கள் சர்வேசுரனுடைய வார்த்தைகளை வெறுத்தனர்.  எனவே ஒருவரும் அந்தோணியாரடைய வார்த்தைகளை கேட்க வரவில்லை. 

அந்த நகரத்து மக்களை பார்த்து சர்வேசுரனுடைய வார்த்தைகளை கேட்டக முடியாதவர்களே உங்களுக்கு போதிப்பதை விட அந்த மீன்களுக்கு போதிப்பேன் என்று சொல்லி அங்கு இருந்த கடல் கரைக்கு சென்றார். அந்தோணியார் என்ன செய்கிறார் என்று பார்க்க அந்த பதிதர்கள் அவரை பின் சென்றனர்.