எதற்கான நேரம் வந்துவிட்டது..
அதைப்பார்க்கும் முன்…
நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளும் விசயங்கள்தான் இவை..
1. சுய நலம் பெருகிவிட்டது… நிறைய உள்ளங்களில் அது மட்டுமே ஆட்சி செய்கிறது..
2. பாவம் பெருகிவிட்டது…. ஒரு குற்ற உணர்வு கூட இல்லாமல் பாவம் செய்யப்படுகிறது..
3. இயற்கைக்கு மாறான பாவத்திற்கு கூட அனுமதி கேட்டு போராட்டம் நடக்கிறது..
4. சின்னத்திரை, பெரிய திரை எல்லாவற்றிலும் குடிப்பதும், குடியை கெடுப்பதும், கொலை செய்வதும், ( தங்களைத் தாங்களே அழிப்பதை ஊக்கப்படுத்துவதும்) மலிந்து விட்டது.
5. கற்பு, கலாச்சாரம், பாரம்பரியம், பாசம் நேசம் எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டது.
6. பணம், சுக போகம், சொத்து, ஆடம்பரம், அதிகாரம் புகழ், ஆட்சி செய்கிறது..
7. உலக அளவில் பெரும்பாலும் எதிரியின் ஆட்சி நடப்பது தெரிகிறது..
8. உலகம் அவன் கையில்… செல்வம் அவன் கையில்..பெரிய பெரிய தலைகள் எல்லாம் அவன் கையில்..
9. மீடியா அவன் கையில்.. உலகம் முழுக்க சினிமா அவன் கையில்..
10. உலகத்தை ஆள்வது அவன்தான் என்பது போல் ஒரு மாயை வந்துவிட்டது.
அவன் கையில்தான் அதிகாரம் இருக்கிறது.. அவன்தான் ஜெயிக்கப் போகிறான்.. என்ற மாயை உலகமெங்கும் பரவிவருகிறது என்றால்..
அதாவது தீமை ஜெயிக்க போவது போல் தெரிகிறது.. அது தன்னுடைய அதிக பட்ச உச்ச வரம்பிற்கு சென்றுவிட்டது என்றால்.. என்ன அர்த்தம்? அதற்கு மேல் அவனைவிட முடியாது.. அப்படியென்றால் என்ன நடக்கும்?
தீமையை அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. அவன் கொட்டத்தை அடக்க நேரம் வந்துவிட்டது… அவன் கதையை அதாவது பாசாசின் ஆட்சியை முடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது..
அவன் கதையை யார் முடிப்பார்.. கடவுள்தான் முடிப்பார்.. அவன் கதை முடிக்கப்பட வேண்டுமானால் ஒருவர் வர வேண்டும் வந்தே ஆக வேண்டும்.. அவர்தான் நம் இயேசு ஆண்டவர்.. அவர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது..
அதாவது..
தீமைக்கு எதிராக..
நன்மை வர வேண்டிய காலம் வந்துவிட்டது.. நன்மையின் மொத்தம்… நன்மையின் முழுமை.. அன்பின் முழுமை வர வேண்டிய காலம் வந்துவிட்டது. நன்மையின் வடிவான… நம் இயேசு ஆண்டவர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது..
தீமையின் ஆதிக்கம் உச்சத்தை நோக்கி செல்வது நமக்கு வருத்தத்தை வருவித்தாலும் நம் ஆண்டவரின் வருகை சமீபத்திலிருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செயலே..
ஆனால் நாம் அவரை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா.. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..
மேலே உள்ள பத்தும் பிசாசின் கனிகள்.. நாம் அந்த கனிகளுக்கு எதிராக பரிசுத்த ஆவியின் கனிகளான பிறர் சிநேகம், பரிசுத்தம், கற்பு, ஒழுக்கம், அன்பு, போதுமென்ற மனோபாவம், பிறருக்கு நம்மாலான உதவி செய்தல், எல்லாரையும் சகோதர சகோதரிகளிகாக பாவித்தல்.. என்ற கனிகளைக்கொண்டு தீமைக்கு எதிராக நன்மை செய்து பரிகாரம் செய்ய வேண்டும்...
எல்லாவற்றிக்கும் மேலாக நாம் நம் ஆண்டவர் இயேசு சுவாமியின் வயதை நிறைவு செய்ய வேண்டும்..
அதாவது நாம் ஒவ்வொருவரும் இயேசுவாக ( கிறிஸ்து அவன், கிறிஸ்து அவள்) வாழ வேண்டும். அவரைப் பின் செல்ல வேண்டும்..
அவரே செல்கிறார்.. அவரே அழைக்கிறார்..
“ இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்தது. " - மத்தேயு 4 : 16
இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார். மத்தேயு 4 : 17
இயேசு சுவாமி நம்மை மனம் திரும்ப அழைக்கிறார்.. நாம் தயாரா?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க!