ஸ்பெயின் தேசத்தில் மன்னன் ராமிரோ ஆட்சி செய்த காலத்தில் ஸ்பெயின் தேசத்தை கைப்பற்றி அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை கைப்பற்றும் தீமையான எண்ணத்தில் பகைவர் படைஎடுத்தனர். மன்னனும் மக்களும் கலங்கினர். அவர்கள் தூய சந்தியாகப்பரை நோக்கி நம்பிக்கையோடு மன்றாடினார்கள். தூய சந்தியாகப்பர் மன்னன் ராமிரோ கனவில் தோன்றி “ பயப்படாதே போரில் உனக்குத்தான் வெற்றி. தைரியமாக போருக்கு போ” என்று உரைத்தார். மன்னனும் வீரர்களை உற்சாகப்படுத்தி சந்தியாகப்பர் நம்மோடு இருக்கிறார் வாருங்கள் போருக்கு செல்வோம் என்று கூறி போருக்கு விரைந்தனர். போர் ஆரம்பமானது..போர் வீரர்கள் சண்டியாகோ ( SANTIAGO) அதாவது சந்தியாகப்பரே என்று சொல்லிக்கொண்டே போரிட்டார்கள். அந்த நேரத்தில் துன்புற்றோருக்கு ஆறுதலாக தூய சந்தியாகப்பர் வெள்ளைக்குதிரையில் ஒரு கையில் வாளும் ஒரு கையில் கேடயமும் ஏந்தியவராக வானிலிருந்து இரங்கினார். அந்த ஸ்பெயின் தேசத்து மக்களுக்காக தானே போரிட்டார்.பகைவர்களை வெட்டி வீழ்த்தினார்..இடியின் மைந்தன் கோபம் கொண்டால் பூமி தாங்குமா என்ன ? .இதை நேரிடையாக மன்னன் ரேமியோவும், படை வீரர்களும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். புது ரத்தம் பாய்ச்ச்ப்பெற்றவர்களாக வீறு கொண்டு அவர்களும் போரிட்டார்கள். பகைவர்கள் அலறி புறமுதுகிட்டு ஓடினாரகள். வெற்றி வாகைசூடினார்கள். மக்கள் ஆர்பரித்து தங்கள் மகிழ்ச்சியயும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள். அன்றிலிருந்து ஸ்பெயின் தேசத்தின் தேசிய பாதுகாவலரானார் தூய சந்தியாகப்பர்..இந்தபோர் ஸ்பெயின் கிளாவியோ என்ற இடத்தில் கி.பி 844- ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நடந்தது
தூய சந்தியாகப்பர் பாதுகாவலராக இருக்கும் நாடுகள் : கலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா &etc.,
இதைப்போல கி.பி 1483-3 ( 15 ம் நூற்றாண்டு கிறிஸ்தவம்மத்திய ஆப்ரிக்கா கோங்கோ என்ற இடத்தில் ஆட்சி செய்த அஃபோன்சோ- I of Kongo ( Name Mvemba a Nzinga) (இரண்டாவது கிறிஸ்தவ மன்னன்) ஆட்சி செய்த காலத்தில் அவனுடைய சகோதரன் ம்பான்சு கிட்டிமா (Mpanzu a Kitima)கிளர்ச்சி செய்து படைகளை திரட்டி படையெடுத்தான். மன்னன் அஃபோன்சோ தூய சந்தியாகப்பரை நோக்கி மன்றாடி போருக்கு சென்றான். போரின் போது வானில் தூய சந்தியாகப்பர் வெண்குதிரையின் மீது வாள் ஏந்தியவராக காட்சி அளித்தார். அதைப்பார்த்து எதிரிகள் பயந்து ஓடினார்கள். மன்னன் முதலாம் அஃபோன்சோ வெற்றி வாகை சூடினான். இது நிகழ்நது ஜூலை 25. அன்று முதல் ஜூலை 25 அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது ஒரு ஆண்டுக்கு பிறகு கோங்கோ தேசத்திற்கே மத்திய விடுமுறை ( Central Hoilday) அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வரி வசூலிக்கப்பட்டு போர் தளவாட சாமான்கள் வாங்கப்பட்டதுமேலும் அன்றைய தினம் தகுதியான ஆண்கள் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின்னளில் புதுப்பகுதிக்கு புலம் பெயர்ந்த கோங்கோவை சேர்ந்த அடிமைகள் புனித யாகப்பர் விழாக்களை அந்த ( celebration of Saint James Day July’25) எடுத்துச்சென்றார்கள். இன்றும் அங்கு புனிதரின் பக்தி முயற்சிகள் உள்ளன. அந்த பகுதிகள் Haiti and Puerto Rico.
இந்த மேற்கண்ட புதுமைகளை புரிந்ததால் புனித சந்தியாகப்பர் “படை மிரட்டி “ என்று அழைக்கப்படுகிறார்.
ஜெபம் : புதுமைகள் புரிந்திடும் படைமிரட்டி சந்தியாகப்பரே ! அன்று உம்மை நம்பிய அந்த மக்களை நோக்கி எதிரிகள் படையெடுத்தார்கள். இன்று எங்களை நோக்கி ஆன்ம எதிரிகள் படையெடுக்கிறார்கள். எதிரிகளை வீழ்த்துவதில் ஜாம்பவானச்சே நீர்..அன்று போல இன்றும் நீர் வெள்ளைக்குதிரையில் படையெடுத்து வந்து எங்கள் ஆன்ம எதிரிகளை முறியடித்து இறைவன் இயேசுவின் பாதம் எங்களை சேர்த்தரும்- ஆமென்
மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..