ஆசிர்வதிக்கப்பட்ட ஆலன் கூறியதாவது,
புனித டோமினிக்கின் மிகச் சிறந்த நண்பரான கர்தினால் பியெர்ரே, திபேருக்கு அப்பால் அன்னை மரியாள்(St .Mary-beyond- the- tiber) என்ற அன்னையின் ஆலயத்தில் அருட்பணியாற்றி வந்தார்.
புனித டோமினிக் வழியாக அன்னையின் பரிசுத்த செபமாலை பக்தியைக் குறித்து அறிந்து, அதனை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செபித்து வந்தார். செபமாலையை அவர் எந்த அளவு நேசித்தாரெனில், ஒவ்வொரு கணமும் செபமாலையின் புகழ் பாடி, காண்போரையெல்லாம் அதனை உறுதியாக பற்றிக் கொள்ள அறிவுறுத்தி வந்தார்.
அதன் பலனாக, சாரசெனியருக்கு எதிராக போராடிய கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பாப்பரசரின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.
செபமாலையின் மகிமையை, ஆற்றலை கிறிஸ்துவ சேனைகளுக்கு எடுத்துரைத்து, அனைவரையும் அதனை செபிக்க வைத்து, மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்தவ சேனைக்கு விண்ணக உதவியை நாடச்செய்தார். அதன்மூலமாக மூவாயிரம் பேர் அடங்கிய கிறிஸ்தவர்களின் சேனை, ஒரு லட்சம் பேர் கொண்ட எதிரிகளின் படையை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிசாசுகளுக்கு செபமாலை பக்தியைக் கண்டு ஒரு சமாளிக்கமுடியாத பேரச்சம் இருப்பதை நாம் காண முடிகிறது. புனித பெர்னார்ட்,"வானதூதர்களுக்கான வணக்கவுரை பிசாசுகளை பறந்தோடவும், நரகத்தை நடுநடுங்கவும் செய்கிறது" என்று கூறுகிறார்.
ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன்," தனது உடல் மற்றும் ஆவியை சாத்தானிடம் அடகு வைத்திருந்த பலரும், பரிசுத்த செபமாலையைக் கையிலெடுத்ததன் வழியாக சாத்தானின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, தங்களின் திருமுழுக்கின் வாக்குறுதிகளை திரும்ப உரைத்து, நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் பற்றுதி கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொண்டனர்" என்று கூறுகிறார்.
****சிந்தனை***
நாமும் நமதன்னையின் பரிசுத்த செபமாலையை இறுக்கப் பற்றிக் கொண்டு நமது உடலையும், ஆன்மாவையும், தேவதையின் வழியாக நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்படைக்க உறுதி கொள்வோமாக!!!
இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!!