செபமாலை பக்தி முயற்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை செபமாலையின் மகிமையாக பல சாட்சியங்கள், புதுமைகள் மற்றும் நிந்தைகளும் கூட கூறப்பட்டு வந்துள்ளன.
ஒரு சிலர் செபமாலையை நிந்தித்து அதனை பயன்படுத்துபவர்களை ஏளனம் செய்து வந்தனர். அவர்களில் டுலூஸ்(பிரான்ஸ்) நகர ஆயரும் ஒருவர்.
புனித டோமினிக் அவர்களின் செபமாலை பக்தியைக் குறித்த போதனையைக் கேட்டு, பின்னர் அதனைக் குறித்து கண்டனம் செய்து, அது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே பொருத்தமானது அனைவருக்கும் அல்ல என்று கிண்டல் செய்தார்.
மிக விரைவில் தான் எண்ணியது தவறு என ஏற்றுக்கொள்ளும் நாளும் வந்தது. சிலநாட்கள் கழித்து அவரது எதிரிகளால் அவதூறுகளுக்கும், பொய்குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானார்.
அச்சமயத்தில், வெளியில் வரமுடியாத அடர்ந்த புதைகுழி ஒன்றில் அவர் சிக்கியது போன்று ஒரு காட்சி கண்டார். அப்போது அவரது தலையை உயர்த்தி மேலே பார்த்த போது நமதன்னையையும், புனித டோமினிக்கையும் கண்டார். அவர்களது கரங்களில் நூற்றியைம்பது வளையங்களைக் கொண்ட சங்கிலியை அவரை நோக்கி இறக்கினர், அதில் பதினைந்து வளையங்கள் தங்கமாக இருந்ததைக் கண்டார்.
அந்த சங்கிலியைப் பற்றி அவர் பாதுகாப்பாக புதைகுழியில் வெளியேறி உலர்ந்த நிலத்திற்கு வந்தார். இதிலிருந்து செபமாலை பக்தியானது தன்னை தனது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் என்பதனை உணர்ந்து கொண்டார். அவ்வாறே அவர் செபமாலை பக்தியை ஆரம்பித்த சில நாட்களுக்குப் பிறகு, அவரின் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போனது.
****சிந்தனை***
நமது எதிரிகளான தலையான பாவங்களான கோபம், மோகம், சோம்பல், கருமித்தனம், போசனப்பிரியம், பொறாமை, அகங்காரம் ஆகியவற்றிலிருந்து, நமதன்னையின் செபமாலை வழியாக விடுதலை பெற்று நமதாண்டவரின் வலப்பக்கம் வீற்றிருக்கும் வரம் பெற மாற்றடுவோமாக!!!