இப்போது நிறைய ஆலயங்களில் குருக்கள் திவ்ய நற்கருணை ஆண்டவரை நாவில் வழங்குகிறார்கள்..
இதை பார்க்கும்போது, கேள்விப்படும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..
திவ்ய நற்கருணையில் நம் ஆண்டவர் இயேசு எப்படி எழுந்தருளி இருக்கிறார் என்று நமக்கு சின்ன குறிப்பிடம் சொல்கிறது என்றால்,
தம்முடைய திருச்சரீரத்தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார்..
திவ்ய நற்கருணையில் இருப்பது நம் கடவுள்.. நம் கடவுளை நாம் வாங்குகிறோம்.. அவரை நாம் உட்கொள்கிறோம்..
கடவுளையே உணவாக சாப்பிடும் ஒரே திருச்சபையின் மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களான நாம் மட்டும்தான்..
இது எவ்வளவு பெருமைக்குரிய மகிழ்ச்சிக்குரிய விசயம்..
நமக்காக பலியான கடவுள் ஏன் தன்னையே உணவாக நமக்குத் தந்தார்..
அவரை நாம் உட்கொண்டு அவராகவே நாம் மாறுவதற்காகத்தான்..
விலக்கப்பட்ட கனியை உட்கொண்டதால் பாவ இயல்புக்கு மாறிய நாம் தேவ இயல்புக்கு மீண்டும் மாற வேண்டும்.. அவருடைய சாயலையும், பாவனையையும், அவருடைய தேவ இயல்பையும் மீண்டும் நாம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்..
புனித சின்னப்பர் சொல்கிறார்..
" நாமும் கடவுளினமே " என்று,
இது எப்பேர்பட்ட பாக்கியம்..
மனித படைப்பு எப்பேற்பட்ட படைப்பு என்பதை ஒருவர் உணர்ந்துவிட்டால் அவர் கடவுளை அனுபவிக்க ஆரம்பித்துவிடுவார்..
மகாபரிசுத்தமான, மகா புனிதமான, மகா வல்லமையும், இரக்கத்தின் முழுமையும், அன்பின் முழுமையுமான கடவுளை நாம் எப்படிப் பெற வேண்டும்..
நம்மை நன்றாக தயாரித்து ( வாரம் ஒருமுறை/மாதம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்து) முடிந்த அளவு பரிசுத்தமான உள்ளத்தோடு தகுதியான விதத்தில் அவரை வாங்க வேண்டாமா?
முழங்காலில் நின்று நாவில்தான் அவரை வாங்க வேண்டும். அதுதானே சரி.
நாம் என்ன குருக்களா?அவரை எப்படி நம் அர்ச்சிக்கப்படாத கரங்களால் தொட முடியும்..?
கடவுளை கையாளத்தானே அவர்கள் குருக்களாக இருக்கிறார்கள்..
அவர்களுக்குரிய உரிமையை நாம் எப்படி எடுக்க முடியும்?
நம் நேச கடவுளை நமக்காக தன்னையே உணவாகத் தந்த, அதுவும் அவர் சாயலை நாம் மீண்டும் பெறுவதற்காக தன்னையே தந்த பரிசுத்த கடவுளை நன்றியுள்ள உள்ளத்தோடும், பரிசுத்த மனத்தோடும், உரிய மேரை மரியாதையோடும் தாழ்ச்சியான உள்ளத்தோடும் வாங்க வேண்டாமா?
நமக்கு ஏற்கனவே அவரைப் பெற ஒரு தகுதி இருக்கிறது..
நாம் கத்தோலிக்கர்களாக இருக்கிறோம்.. அந்த தகுதியே நமக்கு போதும்.. குருக்களுக்கு மட்டும் உரிய, நமக்கு இல்லாத தகுதியை பெறுவதாக நம்மையே நாம் ஏமாற்றி நம் கடவுளை முகம் சுழிக்கவோ, வேதனைப்படவோ ஒரு போதும் வைக்கக்கூடாது..
நமக்கு நிறைய குருக்களை தந்த நம் ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்..
திவ்ய நற்கருணை ஆண்டவர் போற்றப்படுவாராக!
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !