புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு பொதுநிலையாளர் ஆவார். கொல்லர் பணியின் பயிற்சியாளராக இருந்த இவர், தமது சுருக்கமான வாழ்க்கையில் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு, அவர் ஒரு மென்மையான மற்றும் பக்தியான நபராக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தார்.
இவரது மரணத்தின் பின்னர், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவர், நலம் வேண்டி இவரை வேண்டிக்கொண்டதால், இவரது பரிந்துரையால் அவர்கள் அதிசயமாக குணமானதாக நிரூபணமான காரணத்தால், இவருக்கு கி.பி. 1963ம் ஆண்டின் இறுதியில் அருளாளராக முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்டார். இரண்டாவது அதிசயத்தை உறுதிப்படுத்திய பின்னர், 2018ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ், புனிதர் படத்துக்கான தனது ஒப்புதலை உறுதிப்படுத்தினார். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதியன்று, இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.
கி.பி. 1817ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் தேதி, உயிர்த்த ஞாயிறு பெருநாளின் சில நாட்களின் பின்னர் பிறந்த இவரது தந்தையின் பெயர், "டொமெனிக்கோ சல்ப்ரிஸியோ" (Domenico Sulprizio) ஆகும். இவரது தாயார், "ரோசா லூசியானி" (Rosa Luciani) ஆவார். இவர் பிறந்த காலத்தில் கடுமையான பஞ்சம் தலை விரித்தாடியது. பிறந்த அன்றே திருமுழுக்கு பெற்ற இவர், 1820ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாள், உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.
1820ம் ஆண்டின் ஜூலை மாதம், இவருக்கு மூன்று வயதாகையில், இவரது தந்தை மரித்துப் போனார். அதன் பிறகு, நான்கு மாதங்களின் பின்னர், இவரது சின்னஞ்சிறு தங்கை "டோமேனிக்கா" (Domenica) மரித்துப்போனார். இவரது தாயார் வாழ்க்கையை ஓட்டுவதற்காக, 1822ம் ஆண்டு வயதான ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். வளர்ப்புத் தந்தை இவருடன் எப்போதும் கடுமையாகவே நடந்துகொண்டதால், இவர் தமது தாயாருடனும் பாட்டியுடனும் ஒண்டிக்கொண்டார். இதற்கிடையே கத்தோலிக்க குருவானவர் "டி ஃபேபிஸ்" (De Fabiis) என்பவர் நடத்திவந்த பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அவரது குழந்தை பருவத்தில் அவர் திருப்பலிகளில் கலந்துகொள்ளவும், இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் நேரம் எடுத்துக்கொண்டார். ஆனால் அவரது முன்மாதிரியையும் புனிதர்களையும் பின்பற்றினார்.
கி.பி. 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 5ம் தேதி, அவரது தாயார் மரித்துப்போகவே, இவர் தமது தாய்வழி பாட்டியான "அன்னா ரொசாரியா லூசியானி டெல் ரோஸ்சி" (Anna Rosaria Luciani del Rossi) என்பவருடன் வசிக்க சென்றார். கல்வியறிவற்ற அவரது பாட்டி, கிறிஸ்தவ விசுவாசத்தில் தீவிரமானவர். அடிக்கடி கால்நடையாகவே நடந்து போகும் வழக்கமுள்ள இருவரும், தவறாது உள்ளூர் ஆலயத்தில் திருப்பலிகளில் பங்குகொண்டனர். அருட்தந்தை பேண்டாக்ஸி என்பவர் நிர்வகித்த ஏழை மாணவர்க்கான பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க தொடங்கினார். அவருடைய பாட்டி பின்னர் 1826ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதியன்று இறந்தார். அதன்பின்னர், அவரது தாய்மாமன் அவரை கொல்லர் பணி கற்க சேர்த்துவிட்டார். அவரது மாமன் அவரை மிகவும் கடுமையாக நடத்தினார். ஒழுக்கமாக வாழுவதற்கு பட்டினி கிடக்க வேண்டும் என்று நினைத்த அவர், சல்ப்ரிஸியோவுக்கு சரியான உணவளிக்காமல் பட்டினி போட்டார். அவர் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளுக்காக அவரை அடித்து உதைத்து துன்புறுத்தினார். அவரது வயதுக்கு மீறிய வேலைகளை செய்த அவருக்கு 1837ம் ஆண்டு, ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஒரு குளிர்கால காலை வேளையில், அவரது மாமா அவரை "ரொக்கா டாக்லியாட்டாவின்" (Rocca Tagliata) சரிவுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்ய அனுப்பியபோது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அன்று மாலை, உழைப்பின் களைப்பால் அவர் சோர்வாகிப்போனார். ஒரு கால் வீங்கிப் போனது. மற்றும் எரியும் காய்ச்சல் அவரை படுக்கையில் கட்டாயப்படுத்தி தள்ளியது. இதனை அவர் தமது மாமனிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரால் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலவில்லை. அவரது மாமாவுக்கு அவரது துன்பம் அலட்சியமாக இருந்தது. அவரது நிலை பின்னர் ஒரு கால் (Gangrene) செயலற்றுப்போனது. முதலில், தென் இத்தாலியின் "லாஅகுய்லா" (L'Aquila) நகரிலுள்ள மருத்தவமனையிலும், பின்னர், "நேப்பிள்ஸ்" (Naples) நகரிலுள்ள மருத்தவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது வேதனைகள் கூடியதேயொழிய, குறையவில்லை. இருப்பினும் வேதனைகளை தாங்கிக்கொண்ட அவர், அவற்றை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்தார்.
தமது நோயின்போது, வீட்டிலிருக்கையில், அவருடைய புண் சீழ் வைத்ததால், அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அவர் தனது காயத்தை சுத்தப்படுத்த வீட்டிற்கு அருகே ஒரு ஓடைக்கு சென்றார். ஆனால் துணி துவைக்க வந்த ஒரு பெண், அவர் தண்ணீரை மாசுபடுத்துவதாக கூறி, அவரைத் துரத்திவிட்டார். அதற்கு பதிலாக அவர் மற்றொரு ஓடையில் தமது புண்ணை சுத்தம் செய்ய அனுமதிக்க பலமுறை ஜெபமாலை ஜெபித்துவந்தார்.
1835ம் ஆண்டு, டாக்டர்கள் அவரது ஒரு காலை வெட்ட முடிவெடுத்தனர். ஆனால் அவரது வலி தொடர்ந்து இருந்தது. 1836ம் ஆண்டு, மார்ச் மாதம், அவருடைய நிலைமை மோசமடைந்தது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்தபோதெல்லாம் அவருடைய அவரது துன்பங்களும் அதிகரித்தன. கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை அவர் தொடர்ந்தார். தமது முடிவு நெருங்கிவிட்டது என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து, அவர் மரித்த நாளன்று, அவர் சிலுவையாண்டவரின் திருச்சொரூபத்தை வரவழைத்தார். மற்றும் கடைசி நேரத்தில் தமது ஒப்புரவாளரை அழைத்து, அவரிடம் இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். 1836ம் ஆண்டு, அவர் தமக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக மரித்தார். அவரது எஞ்சியுள்ள மிச்சங்கள் இப்போது நேபிள்ஸில் (Naples) நகரிலுள்ள "சான் டோமினிகோ சொரியானோ" (Church of San Domenico Soriano) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவரது மரணத்தின் பல தசாப்தங்களுக்கு பிறகு திருத்தந்தை "பதின்மூன்றாம் லியோ" அவரை தொழிலாளர்களின் முன்மாதிரியாக முன்மொழிந்தார்.