ஸ்பெய்ன் தேசத்தில் பல இடங்களில் நம் சந்தியாகப்பர் வேதம் போதித்திருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் அவர் எதிர்ப்பார்த்தது போல மக்கள் உடனடியாக மனம் திருந்திவிட வில்லை. நாம் நினைத்தது போல் எல்லாம் நடந்து விட்டால் அப்புறம் தெய்வம் எதற்க்கு ?...சந்தியாகப்பர் எவ்வளவோ புத்தி கூறினாலும்.....அற்புதங்களும் அருங்குறிகள் பல புறிந்தாலும்
மக்கள் யேசுநாதரை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருந்தார்கள். " இதோ பார் ஏதோ வெளி நாட்டிலிருந்து வந்திருகின்றாய்...நாலு நல்ல காரியமும் பண்ணுகின்றாய்...
அதர்காக மனம் மாறு...மதம் மாறு...யேசுவை ஏற்றுக்கொள்..என்றெல்லாம் சொன்னால் நமக்கு சரிப்பட்டுவறாது....புறிஞ்சி நடந்துக்கோ என்று சொல்லி கடகடவென்று
சிரித்தான் இப்படிப்பட்ட நிந்தைகளாள் நம் சந்தியாகப்பர் மனம் வெறுத்து....என்ன மக்கள் இவர்கள்...வணங்காக்கழுத்துள்ள மக்கள்..இவர்கள்
எல்லாம் என்னை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ?.....பேசாமல் இவர்கள் மேல் இடியை இறக்கிவிடவேண்டியது தான்.அப்போது தான் இவர்களுக்கு புத்தி வரும் என்று நினைத்து சற்றே கண் மூடி யேசுவை நினைத்தார். யேசுநாதரும் அவர் முன்னே தோன்றினார்...யாகப்பா...ஏன் உனக்கு இவ்வளவு உக்கிரம்.. அன்று..நாம் உன்னை சமாரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பியபோது கூறியவற்றை மறந்துவிட்டாயா.....ஓநாய்களுக்கிடையே ஆட்டுக்குட்டியை அனுப்புவது போல் நான் உங்களை அனுப்புகிறேன்....
என் பெயரால் நற்செய்தியை அறிவியுங்கள்....நோய்களை தொட்டு குணமாக்குங்கள்...அசுத்த ஆவிகளை ஓட்டுங்கள்...என் பெயரால் அனைத்தும் நடக்கும்.... அனைத்தும் உங்களுக்க்கு கீழ்படியும்..என் நற்செய்தியை கேட்க்க செவியுள்ளவன் கேட்க்கக்கடவான்....தீயோரை அழிப்பது நம் தந்தையின் நோக்கமல்ல...தீயோர் மனம் திரும்பி மீண்டும் நம்மிடம்
வருவதே நம் விருப்பம்.....ஆகவே சினம் தனிவாயாக....சினம் தன்னையும் அழித்து மற்றவரையும் அழிக்கும் ஒரு கொடும் ஆயுதம்...படை கொண்டிருப்பவனுக்கு அதை நடத்தவும் தெரியவேண்டும்....அடக்கவும் தெரிந்திருக்க வேண்டும்....இல்லை என்றால் அவனுக்கு அழிவு நிச்சயம்...இந்த மக்களை மீட்க்கத்தானே நாம் அனுப்பபட்டோம்...நீ சினம் கொண்டால்
எப்படி...எனவே சினம் தனிவாயாக...பொறுமையைகடைபிடி என்றார்...இவ்வளவு காட்சிகளும் நினைவுகளும் தான் அமர்ந்திருந்த எப்ரோ நதிக்கரையில் அவருக்கு தோன்றி மறைந்தது. இந்த எப்ரோ நதியின் குளிர்ந்த காற்றின் இன்பத்தில் சுய நினைவுபெற்றார் நம் சந்தியாகப்பர்.. அப்போது ஒரு பேரதிசயம் அங்கு நடந்தது...அவருக்கு முன்பே இருந்த ஒரு பெரிய பாறையின் மீது தேவ தாயார் தோன்றினார்கள்...அப்போது தேவ தாயார் உயிரோடுதான் இருந்தார்கள்...ஜெருசலேமில் சீயோன் பட்டணத்தில் தான் தங்கி இருந்தார்கள்
ஒரே நேரத்தில் ஜெருசலேமிலும் இங்கே ஸ்பயின் தேசத்தில் எப்ரோ நதிக்கரையில் அமர்ந்திருந்த சந்தியாகப்பருடனும் தோன்றினார்கள். " மகனே சந்தியாகு..அமைதியாக இரு.. இந்த சாரகோசா என்னும் நகரில் எப்ரோ நதிக்கரையில் நாம் தோன்றியுள்ள இந்த பாறையின் மீது நமக்காக நம் பெயரில் ஒரு ஆலயம் அமைப்பாயாக..இந்த நாட்டு மக்களை நாம் இனி எம் மக்களாக ஏற்றுக்கொள்வோம்...இங்கு இனிமேல் பேரதிசயங்கள் நடக்கும் ...அனைவரையும் நாம் எம்பால் ஈர்த்துக்கொள்வோம்.. நம் பெயரில் ஆலயம் அமைத்த பிறகு மீண்டும் ஜெருசலேம் பட்டிணம் வருவாயாக.. அங்கு உமக்காக வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கிறது. .இதோ நம் வடிவம் இதை நீர் எம்பெயரில் கட்டப்போகும் அந்தக்கோவிலில் வைப்பாயாக" என்று ஒன்றேகால் அடி உயரமே உள்ள ஒரு மரச்சிற்ப்பத்தை அவருக்கு கொடுத்தார். அந்த மரச்சிற்பம் தேவதாயாரும் அவர் திரு மகன் குழந்தையேசுவும் அவரது
வலது கையில் ஒரு புறா இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தது... இந்த சிலையை தாங்கும் பீடம் ஆறு அடி உயரம் கொண்டது.. இந்த தேவ தாயார் தூண் மாதா [OUR LADY OF PILLARS] என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றார்.