சந்தோஷ தேவஇரகசியங்கள் : இச்செடியின் பசுமையான இலைகள் அன்னையின் வாழ்வில் சந்தோஷ நிகழ்வுகள் !
துக்க தேவஇரகசியங்கள்: இச்செடியின் முட்கள் அன்னையின் வாழ்வில் துன்பமான நிகழ்வுகள்!
மகிமை தேவ இரகசியங்கள்: இச்செடியின் அழகான மொட்டுக்கள் அன்னையின் வாழ்வில் மாட்சிமை அடைந்த நிகழ்வுகள்!
ஔியின் தேவ இரகசியங்கள்: இச்செடியின் அழகான மலர்கள் அன்னையின் வாழ்வில் மலர்ந்த புதுமைகள்
நாம் ஜெபிக்கும் அன்னையின் ஜெபமாலையை கி.பி 1214 ம் ஆண்டு புனித தோம்னிக் அவர்கள் வழியாக அன்னை திருச்சபைக்கு வழங்கினார்கள் அக்காலத்தில் ஆல்பிஜென்சியன்ஸ் என்ற முரன் பாட்டு கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்கு திரும்பி வரவேண்டுமென்று புனித தோம்னிக் ஜெபித்து வந்தார் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனம் திரும்ப வேண்டி ஜெபித்தார் மூன்றாம் நாள் நீண்ட ஜெபத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார் அப்போது அன்னை மரிதாய் புனித தோம்னிக்கு காட்சி தந்து எதிரிகளை முரன் பாட்டுக் கொள்கையினர்களை பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி ஜெபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்
நமது மாமரிதாய் ஜெபமாலை ஜெபிப்பதை இப்படி சொல்கிறார்கள் நீங்கள் ஒவ்வொரு முறையும் அருள்நிறைந்த மரியாயே என்ற ஜெபத்தை சொல்லும் போது எனக்கு ஒரு ரோஜா மலரை காணிக்கையாக கொடுக்கிறீர்கள் ஐம்பத்துமூன்று மணி சொல்லும்போதும் எனக்கும் இயேசுவுக்கும் ரோஜாக்களை கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள்