♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் உயிரே ஆண்டவரைப் போற்று
என் உள்ளமே அவர் திருப்பெயரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை என்றும் மறவாதே
1. குற்றங்களை மன்னிக்கின்றார் நோய்களை நீக்குகின்றார் -2
என் உயிரை அழிவினின்று பாதுகாக்கின்றார் -2
என் வாழ்வை நன்மைகளால் நிறைவு செய்வார்
2. மண்ணகத்தில் நம் வாழ்வு மலர்போல் நிலையற்றது -2
ஆண்டவர் பேரன்போ எளியவர் மீதிருக்கும் -2
அரவணைக்கும் தந்தையாய் இரக்கம் கொள்வார்