♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்றென்றும் உள்ள பேரன்பை நினைத்து
ஆண்டவர்க்கு நன்றி என்றும் கூறிடுவோம் (2)
அவர் நல்லவர் அவர் வல்லவர் -2
அல்லேலூயா எனப் போற்றிடுவோம் -2
1. ஆண்டவர் வல்லவர் செயல்களை நாளும்
எப்படிச் சொல்லிப் பாடிடுவோம் (2)
தேர்ந்திட்ட இஸ்ரயேல் மக்களைப் போல - 2
பேற்றினை எமக்குப் பங்காக்கினீர் (பெரும்) -2
2. பன்முறைதவறி பாதைகள் மறந்தும்
பெயர் பொருட்டு எம்மை விடுவித்தார் (2)
சிதறிய எம்மை ஒன்றித்து சேர்த்தார் -2
புகழ்ப்பாக்கள் இசைத்து நன்றி கூறுவோம் (என்றும்) - 2