ஆண்டவரே உம் பேரன்பிற்கேற்ப 109

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே உம் பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும் -2


1. என் தலைவராகிய கடவுளே

உம் பெயரை முன்னிட்டென்னை மீட்டருளும்

என் தலைவராகிய கடவுளே

உம் இனிமை பொருட்டென்னை மீட்டருளும்

நானோ எளியவன் நானோ வறியவன்

என் இதயம் என்னுள் புண்பட்டது


2. என் ஆண்டவரே என் கடவுளே எனக்கு உதவி அளித்தருளும்

என் ஆண்டவரே என் கடவுளே

உம் பேரன்பின் பொருட்டென்னை மீட்டருளும்

இது உம் ஆற்றலன்றோ இது உம் செயலன்றோ

என்றே அவர்கள் உணர்ந்திடட்டும்