"எனவே, என் சகோதரரே, என் உடன் குருக்களே, ஜெபமாலையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் மட்டும் போதாது, நாமும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஜெபமாலையின் முக்கியத்துவம் பற்றி நாம் உறுதியான எண்ணம் கொண்டிருந்தாலும் அதை நாம் ஜெபிக்காமல் இருந்தால் நம் ஆலோசனையை மக்கள் கேட்டு நடப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. ஏனென்றால் யாரும் தன்னிடம் இல்லாத ஒன்றை பிறருக்கு கொடுக்க முடியாது.
“செய்யவும் போதிக்கவும் தொடங்கினார்” (அப்.1:1) தாம் போதித்தவற்றை முதலில் தாமே செய்து காட்டிய நமதாண்டவருடைய மாதிரிகையின்படி நாமும் ஒழுக வேண்டும். சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப் பற்றியன்றி வேறு ஒன்றையும் சின்னப்பர் (புனித பவுல்) அறிந்திருக்கவில்லை. அவரை நாம் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஜெபமாலையை போதித்தால் நீங்கள் இவ்வனமே செய்வீர்கள்.
ஜெபமாலை என்பது பரலோக அருள் நிறை மந்திரங்கள் இவற்றின் குவியலா ? இல்லை. சேசுவினைடையவும், மரியாயினுடையவும், வாழ்வு, பாடுகள், மரணம், மகிமை ஆகிய திருநிகழ்ச்சிகளின் சுருக்கமே ஜெபமாலை.
ஜெபமாலையைப் பிரசிங்கிப்பது எவ்வளவு ஞான ஆற்றலுள்ளது என்பதை ஆண்டவர் அருளால் அனுபவத்தில் நான் கண்டேன். இதை மிக விரிவாக என்னால் கூற முடியும். மிக ஆச்சரியமான மனமாற்றங்களை அது செய்துள்ளதை என் கண்ணாலேயே நான் கண்டிருக்கிறேன். ஜெபமாலையைப் பிரசிங்கிப்பதை குருக்கள் ஒரு பழக்கமாக இக்காலத்தில் கொண்டிராமலிருந்தாலும் இவ்வழகிய பக்தி முயற்சியை நீங்கள் எடுத்துக் கூற என் அனுபவங்கள் உங்களைத் தூண்டுமானால் அவற்றை மகிழ்ச்சியுடன் இங்கு விவரிப்பேன். ஆனால் இப்போது எழுதுகிற இந்தச் சிறு நூலில் ஜெபமாலையைப் பற்றி சான்றுடன் கூடிய ஒரு சில தொன்மை நிகழ்ச்சிகளைக் கூறுவதே போதும் என்று கருதுகிறேன்.
நன்றி : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்.
சிந்தனை : நம் புனிதர் இந்நூலில் குறிப்பிட்டுள்ள ஜெபமாலை செய்த சில அற்புதங்களே ரொம்பவே அசாதரமானது. இந்த புதுமைகளே இவ்வளவு பெரியவை என்றால் நம் மாதாப் புனிதர் வாழ்வில் எவ்வளவு புதுமைகள் நடந்திருக்கும்… ஜெபமாலையின் மகிமையை நம் புனிதர் கூறுவது போல் அனுபவத்திலேதான் அதை சுவைக்க முடியும்..
குறிப்பு : ஜெபமாலை இரகசியம் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க. சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், Ph :9094059059, 9790919203, காமராஜர்புரம், கிழக்கு தாம்பரம் அருகில், சென்னை.
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. வாழ்க… வாழ்க.. மாதாவே….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !