என் நன்றிப் பாடல் 118

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் நன்றிப் பாடல் உமக்கே என் இறைவா

எந்நாளும் நான் பாடுவேன்

உன் அன்பு எனக்கு குறைவின்றி இருக்க

நிறைவாக நான் வாழுவேன்

நன்மையும் அன்பும் நிறைவான தேவா -2

உனை நினைந்து மனம் மகிழுவேன் (நான்) -2


1. என்றென்றும் இனிதாய் உம் அன்பு என்மேல்

என மகிழ்ந்தார் இஸ்ராயேலர் ஆ

இடர் வந்த வேளை தொடர்ந்தென்னைக் காப்பீர்

வினை தீர்க்கும் என் தேவனே

பகைகொண்டு பலரும் வெறுத்தென்னை மறுத்தும்

என் படைபலன் என் அரணாகுமே


2. நிறைவாய் உம் பலம் என்மேலே இருந்தால்

உன் ஆற்றல் மீட்பாகுமே ஆ... இறந்தாலும்

உயிர்ப்பேன் இறைஅன்பின் பலத்தால் நிறைவாக நிதம் பாடுவேன்

மாற்றார்கள் விலக அகமகிழ்ந்தேன் நாளும்

என் இறையாட்சி துணை எண்ணியே