“ பாப்பரசர் மோட்சத்தில் இருக்கிறார் “
பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் 1958, அக்டோபர் 9 அன்று இறந்தார். அன்று பாத்ரே பியோ ஒரு சகோதர துறவியிடம்; “ 12-ம் பத்திநாதர் மோட்சத்தில் இருக்கிறார். இன்று என் திவ்ய பலி பூசையின்போது நான் அவரைக் கண்டேன் “ என்று அறிவித்தார்.
மற்றொரு பாப்பரசரைப்பற்றி :
பாப்பரசர் பத்தாம் பத்திநாதர்: “ இந்தப் புனித ஆன்மாவுக்கு நம் ஜெபங்கள் தேவைப்படாது என்று நான் நம்புகிறேன். ஆயினும், எப்படியானாலும் நாம் அவரது நித்திய இளைப்பாற்றிக்காக ஜெபிப்போம். ஏனெனில் அவருக்குத் தேவையில்லை என்றாலும் நம் ஜெபங்கள் ஒரு போதும் வீணாய்ப் போகாது.
மோட்சத்தைப் பற்றி தந்தை பியோ..
“ மோட்சம் என்பது முழுமையான மகிழ்ச்சி, தொடர்ச்சியான மகிழ்ச்சி! “
“ மோட்சம் எப்படிப்பட்டது என்று கண்டு பிடிக்க முயல்வது பயனற்றது. ஏனெனில் அதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இவ்வாழ்வின் திரை விலக்கப்படும் போது, ஒரு வித்தியாசமான மனித அறிவுக்கு எட்டாத முறையில் நாம் மோட்சத்தைப் பற்றி புரிந்து கொள்வோம்.”
“……இரவில் நான் என் கண்களை மூடும்போது, அந்தத் திரை விலக்கப்படுகிறது. மோட்சம் என் கண் முன் விரிவதை நான் காண்கின்றேன். இந்தக் காட்சியால் நான் பேருவகை பெற்று, என் உதடுகளில் ஒரு இனிய புண்ணகையோடும், முழுச்சமாதான முகத்தோடும், நான் அமைதியான உறக்கத்தில் விழுகின்றேன்.”
1912-. அக்டோபர் 21 அன்று தாம் தந்தை அகஸ்டினோவுக்கு எழுதிய கடிதத்தில்: “ இரவில் திரை விலகி, மோட்சம் என் முன் விரியும்போது, நான் ஒரு முழுமையான அமைதியை உணர்கிறேன். அதன் பின் என் குழந்தைப் பருவத் தோழர் (தந்தையின் காவல் தூதர்) என்னை எழுப்பி விடும் வரை நான் உறங்குகின்றேன்.
“ தந்தாய் ஒருவன் மோட்சத்திற்கு சென்றவுடன் நித்திய பேரின்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடுகிறானா, அல்லது உலகம் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா? “ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “ அங்கே பேரின்பம் இல்லை என்றால் அது மோட்சமாக இருக்காது. உலக முடிவில், உயிர்தெழந்த உடல்களும் தங்கள் ஆன்மாக்களோடு சேர்ந்து மோட்சத்தை துய்த்து மகிழும் “ என்றார்.
அன்னா டார்ட்டோரா என்பவள், தனது உறுதி பூசுதலின் நாளில் பாத்ரே பியோவிடம் தனக்கு ஒரு பரிசு தரும்படி கேட்டாள். “ நீங்கள் மோட்சம் போகும்போது அந்த பரிசை எனக்குத் தரவேண்டும். அங்கே எனக்காகவும் நீங்கள் ஓரிடத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும்.” பியோ அவளிடம்: “ நான் உண்மையாகவே மோட்சம் செல்வேன் என்று நினைக்கிறாயா? “ என்று கேட்க, அன்னா பதிலுக்கு “ தந்தாய் நீங்கள் போகவில்லை என்றால், வேறு யார் அங்கே போக முடியும்?” என்று கேட்டாள். பியோ புண்ணகைத்தபடி, “ சரி, நான் அங்கே சென்றால் உன் கழுத்தைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொள்வேன் என்று உனக்கு வாக்களிக்கிறேன் “ என்றார்.
ஒரு பெண்ணிடம், இறந்த அவளது தந்தை பற்றி : “ மகிழ்ச்சி கொள். அவர் இறக்கவில்லை. முடிவே இல்லாத ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மோட்சத்தில் வாழ்கிறார். தமக்கு மிகப்பிரியமானவர்களின் நடுவில் வாழ்கிறார்.” என்றார்.
இரண்டு வயது குழந்தையை இழந்த ஒரு தாயிடம்: “ உன் குழந்தை மோட்சத்தில் இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. உன்னைக் கண்டு புண்ணகைக்கிறது. உனக்காக ஒரிடத்தை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது.” என்றார்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர் சபை சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ. கபரியேல் Ph: 9487257479
சிந்தனை : நாம் இந்தப்பூமியில் வாழும் போது மோட்சத்தை சம்பாதிக்கும் முயற்சியில் வாழ வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். ஜெப தவங்கள் செய்ய வேண்டும். பிறரை நேசிக்க வேண்டும். நம்மைத் துன்புறுத்துவோரையும் நேசித்து அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கடவுள் நமக்குத் தந்த கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.. நம் குடும்பங்களை நன்றாக கவனிக்க வேண்டும்…கடவுளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை குடும்பத்திற்கும் பிறருக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் நம்மால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்… இன்னும் நிறைய உள்ளன மோட்சம் செல்ல பல வழிகள் உள்ளன..
அதே போல் நம் குடும்பத்தில் மரித்த நம் உறவினர்கள், துறவிகள், யாரும் நினையா ஆன்மாக்களுக்காக திருப்பலி பூசை ஒப்புக்கொடுத்தல், ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல் (ஒரு பத்து மணிகளாவது) நம் பரித்தியாகங்களை அவர்களுக்காக ஒப்புக்கொடுத்தல் போன்ற செயல்களை தவறாமல் செய்ய வேண்டும்…
“அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்”. லூக்காஸ் 16 : 9
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !