♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே என்னை அறிந்திருக்கின்றீர்
நான் நடப்பதும் படுப்பதும் தெரிந்திருக்கின்றீர்
எந்தன் நினைவுகள் யாவையும் உய்த்துணர்கின்றீர்
கரம் பிடித்து நடத்துவீர்
என்னை வலிமைப்படுத்துபவர் துணைகொண்டு
யாவும் செய்திட திறனுண்டு (2) அல்லேலூயா -4 (2)
1. வறுமையில் வாழவும் வளமையில் இருக்கவும்
மனதினைத் தாரும்
நிறைவினை குறைவினை வறுமையின் சூழலை
ஏற்க திடம் தாரும்
துயரினில் வாழ்ந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும்
உறுதியைத் தாரும்
இறைவார்த்தை நிறைவாக பலியாக எனைமாற்றும்
ஆற்றலை ஊற்றும் அல்லேலூயா - 4 (2) - என்னை வலிமை...
2. கருவாக உருவாக்கி உயிரோடு உயிராக நிறைந்தீரே ஜயா
வெறுப்போரை எதிர்ப்போரை மன்னிக்க நேசிக்க
ஞானத்தைத் தாரும்
எதிரிகள் நடுவில் இருள்சூழ்ந்து மறைத்தாலும்
அமைதியை தாரும்
இறைப்பணியின் எண்ணங்கள் எனில் வளர நிலைத்திட
அல்லேலூயா - 4 (2)