மனித பலவீனத்தை அறிந்து மனிதர்களின் இறப்பிற்குப் பின் அவர்களுடைய ஆத்துமாக்களை தமது தேவ ஸ்நேகத்தின் சுவாலைகளால் சுத்திகரித்து, அந்த தேவ ஸ்நேக தூய்மையை அவை அடைந்ததும், தமது மோட்ச இராஜ்ஜியத்தில் ஏற்றுக்கொள்ளத் திருவுளம் கொண்ட இறைத்தந்தையை நாம் அளவற்ற நன்றியோடும், நேசத்தோடும் வாழ்த்திப் போற்றுவோமாக..
இந்த தற்காலிகமாக இடத்தில் அற்ப பாவம் செய்தவர்கள் கூட மிகக் கொடிய வேதனையை அனுபவிக்க வேண்டும். காரணம் " நான் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் பரித்தராய் இருங்கள்" (லேவி 19:2) என்று கடவுளே கூறுகிறார்.
ஒரு புதுமையின் ஒரு பகுதி :ஒரு குரு தன் குதிரையில் ஏறி ஆற்றைக் கடக்கும் போது ஒரு அதிசய கை அவர் குதிரையில் போக விடாமல் தடுத்து நிறுத்தியது. அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த குரு " நீ யார் என்னை ஏன் தடுக்கிறாய் என்று கேட்டபோது, " நான்தான் நீங்கள் புனிதராக கருதிய மேற்றானியார், நான் செய்த அற்ப பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் கொடிய வேதனைப்படுகிறேன்" என்றார். " நீர் செய்த அற்ப பாவம் எது என்று குரு கேட்க, " நான் ஆயர்கள், குருக்கள், துறவியர் செய்ய கடமைப் பட்டுள்ள, கட்டளை ஜெபித்தை, காலையிலேயே பகல், மாலை, இரவு ஜெபிக்க வேண்டியதை ஒரே மூச்சாய் செய்து விடுவேன் அல்லது வேலையின் நிமித்தம் பகலில் ஜெபிக்காவிட்டால் இரவில் ஜெபித்து விடுவேன். நான் கட்டளை ஜெபத்தை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் ண்டபோனதே நான் செய்த அற்ப பாவம் " என்றார்..
குரு மேற்றானியானியாரின் கையைத் தொடவே அது நெருப்பிலே ஒரு பொழுதிலேயே வெந்து போயிற்று. குரு கையை சட்டென்று உருவிக்கொண்டார்.
நன்றி: உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள் -52 நூல்..
புத்தக தொடர்புக்கு பிரதர் பால்ராஜ் 9487609983, பிரதர் ஜேசுராஜ் ph:9894398144.
குறிப்பு: அற்ப பாவத்தை பற்றி நாம் பார்த்தோம்...
இப்போது நாம் பாவம் செய்கிறோம் என்ற உறுத்தல் கூட இல்லாமல்.. பாவத்தை உணராமல் குற்ற உணர்வு இன்றி செய்வது வேதனையானது.. ஆபத்திற்குரியது... முதலில் இப்போது நாம் இருக்கும் நிலையை உணர்ந்து உடனே நம்மைத் திருத்திக் கொண்டு ஜெப தவ வாழ்வில் இனைந்திடுவோம்....
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!