இறைவா என்னைக் காத்தருளும் 16

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா என்னைக் காத்தருளும் அடைக்கலம் கேட்கின்றேன்

நீரே என் துணையாகும் நம்பினேன் தெய்வமே (2)

வாழ்வின் வழிகளை அறியச் செய்தீர்

வளரும் மகிழ்வினைப் பொழியச் செய்தீர்

உமது வலப்புறம் மகிழ்ந்திருப்பேன் - 2


1. புவியில் வாழும் தூய உள்ளம் என்றும் பேரின்பம்

பாதை மாற்றும் வேற்று தெய்வம் மனதில் போராட்டம் (2)

மயக்கும் பெயரோ தீய பலியோ கலங்கிட மாட்டேன் - வாழ்வின்


2. ஆண்டவரே என் உரிமைச் செல்வம் போற்றி மகிழ்ந்திடுவேன்

வலப்புறமாக இறைவன் இருப்பார் அசைவுற மாட்டேன் (2)

அழிக்கும் சூழ்ச்சிப் படுகுழியில் என்னை விடமாட்டார் - வாழ்வின்