♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே எம் ஆண்டவரே
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2
உயிராய் நீர் காக்கும் போது (2) எனக்கு என்ன கவலை - 2
1. வீழ்ந்த நேரங்களில் கரம் நீட்டுகின்றீர்
வாழும் வழிகளையே எனக்குக் காட்டுகின்றீர்
நீரே எந்தன் மீட்பின் கிண்ணம் - (2)
எனது உரிமைச் செல்வம் - 2
2. துன்ப வேளைகளில் எனக்கு துணையாய் இருப்பீர்
சோர்ந்த என் மனதை நீர் தேற்றி விடுவீர்
நீரே என்றும் இதய நண்பன் (2)
எனது வாழ்வின் தலைவன் - 2