“என் மீது இரக்கமாயிருங்கள். நண்பர்களே, நீங்களாவது என் மீது இரக்கமாயிருங்கள். எனெனில் ஆண்டவரின் கரம் என்மீது பாரமாக உள்ளது “
இதுதான் உத்தரிக்கிற ஆன்மாக்கள் இப்பூவுலகில் வாழும் தங்களது சகோதர்களிடம் உதவியை வேண்டி மன்றாடும் உள்ளத்தை நொறுக்கும் செபமாக உள்ளது. அந்தோ! பலரும் இச்செபத்திற்கு செவிமடுப்பதில்லை.
சில பக்தியான கிறிஸ்தவர்களே, இரக்கமின்றி உத்தரிக்கிற ஆன்மாக்களை புறக்கனிப்பது புதிராக உள்ளது. இது இவர்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருப்பது பற்றி ஏறக்குறைய நம்பிக்கையின்றி இருப்பதையும் முழுமையாக இக்கருத்தில் தெளிவில்லாமல் இருப்பதையும் காட்டுகிறது.
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இவர்கள் பலி பூசை ஒப்புக்கொடுக்காமல், நாட்கள், வாரங்கள், ஏன் பல மாதங்கள் கூட கடந்து போகிறது. அரிதாக இவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். அரிதாகத்தான் நினைக்கின்றார்கள். பரிதாபமான உத்தரிப்பு நிலையில் ஆன்மாக்கள் அக்னிபடுக்கையில் சொல்லொண்ணா வாதைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது இவர்கள் இங்கு பூரண நலத்துடன் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த கடின மனப்பான்மை நிலைக்கு எது காரணம் ? அறியாமை, மதியீனம் மற்றும் அசட்டைத்தனம்தாம்.
உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி மக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை. அங்கு கொடிய அக்னியில் ஆன்மாக்கள்படும் அகோர வேதனை குறித்தும், அவ்வேதனை பல ஆண்டுகளாக நீடிக்கிறது என்பதைக் குறித்தும் அறியாமல் இருக்கின்றார்கள். இதன்பலனாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்வதில் சிறிய அளவே அக்கறை எடுக்கின்றனர் அல்லது முற்றிலுமாகவே அக்கறை காட்ட தவறிவிடுகின்றனர்.
மிகவும் வேதனையான செயல் என்னவென்றால் ஏற்கனவே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இவர்களுடைய உதவியை மட்டுமே நம்மியிருக்கின்ற ஆன்மாக்களை முற்றிலுமாக புறக்கனித்துவிடுவதுதான்.
உத்தரிக்கிற ஸ்தலம் என்றால் என்ன?
உத்தரிப்பு ஸ்தலம் என்பது மரணத்திற்கு பின் ஏறக்குறைய அனைத்து ஆன்மாக்களுமே, பாவத்தின் நிமித்தம், வேதனை அனுபவிக்கும் பொருட்டு தள்ளப்படுகின்ற ஓர் அக்னிச் சிறையாகும்.
இதோ உத்தரிக்கிற ஸ்தலத்தைப்பற்றி திருச்சபையின் வேதபண்டிதர்கள் கூறும் சில உண்மைகள்.
“ வேதனையின் கொடுமை எவ்வளவு என்றால் ஒரு நிமிடம் இந்த பயங்கர நெருப்பில் இருப்பது நூறாண்டுகாலம் இருப்பதுபோல் இருக்கும் “
இறையியல் வல்லுநர்களின் இளவரசராக கருதப்படும் புனித தாமஸ் அக்வினாஸ், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள நெருப்பின் அனல், நரக நெருப்பின் அளவை ஒத்தே உள்ளது என்றும், இலேசாகப்பட்டால் கூட அது உலகத்தில் அனுபவிக்கக்கூடிய அனைத்து வேதனைகளையும்விடகொடியதாக உள்ளது என்றும் கூறுகிறார்.
நன்றி : “ என்னைப்படி அல்லது வருத்தப்படு “ நூல், ஆசிரியர் : சங்.பவுல் ஓ சலைவன் சுவாமி,
நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;
சிந்தனை : நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டியது, நம்மிடையே வாழ்ந்து மரித்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக அடிக்கடி திருப்பலி பூசை ஒப்புக்கொடுப்பதும், திருப்பலியில் பங்கேற்பதும், அவர்களுக்காக ஜெபமாலை ஜெபிப்பதும், பரித்தியாகங்களைஒப்புக்கொடுப்பதுமேயாகும்.
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!