பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார். அருளப்பர் (யோவான்) 20 : 22-23
பரிசுத்த ஆவியானவர் ஆர்ப்பாட்ட இடத்தில் அல்ல அமைதியான இடத்திலும் அவர் வருவார். நம் இயேசு சுவாமி தன் சீடர்கள் மேல் பரிசுத்த ஆவியை ஊதி பாவசங்கீர்த்தனம் என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்துகிறார். குருக்களுக்கு நம் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு கிறிஸ்துவே வழங்குகிறார். நாம் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அங்கு பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார். குருவானவர் கிறிஸ்துவாகிறார். இது இயேசு தெய்வம் ஏற்படுத்திய திருவருட்சாதனம். இயேசு சுவாமி கொடுத்த அதிகாரம். இதை பிடுங்கவோ மறுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. “ நாங்கள் நேரிடையாக பாவசங்கீர்த்தனம் செய்வோம் “ என்று சொன்னால் அவன் இயேசுவின் கட்டளையை மீறுகிறான். அகங்காரத்திற்கு அடிபணிகிறான். அவனுடைய பாவம் மன்னிக்கப்படாது. “ யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். யாருடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ அவை மன்னிப்பின்றி விடப்படும் “ என்று இயேசு சுவாமி சொல்லிய பின்பு
“ நாங்கள் நேரிடையாக பாவசங்கீர்த்தனம் செய்கிறோம் " என்பது பயனற்றது.
இந்த இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளமல், விமர்சனம் செய்து, கேவலமாக பேசினால் யார் கோபப்படுவார். அது யாருக்கு எதிரான நிந்தை. அவர்கள் மத்தியில் தூய ஆவியானவர் செயல்படுவாரா? இது யாரை ஏமாற்றும் வேலை. நம் கத்தொலிக்க மக்களும் யார் எதைச்சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள். கத்தொலிக்க திருச்சபை ஒன்றை போதிக்கிறது என்றால் அது உண்மை. சத்தியம்.
ஆகவே, இயேசு சுவாமியின் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் “வசனம் உங்களை விடுதலை ஆக்கும் ஏன்றால் ஏற்றுக்கொள்வீர்களோ “ சரி.. அவர்களை விட்டுவிடுவோம். “ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்கும் “ கத்தொலிக்கர்களே, நீங்கள் பின்னால் போகும் எந்தப்போதரும் பாவசங்கீர்த்தனம் செய்யாவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள்”.
பாவமுள்ள ஒரு மனிதனால் மோட்சம் போக முடியுமா? அல்லது அது மன்னிக்கப்படாவிட்டால் உத்தரிக்கும் ஸ்தலம் வாய்ப்பு கூட கிடைக்காது.
பெந்தகோஸ்தே நாளில் நற்செய்தி அறிவிக்க அதுவும் எல்லா மொழிபேசுபவர்களுக்கும் நம் சாதாரண மீனவர்களாகவும், கல்வி அறிவில்லாத எளியவர்களுமாய் இருந்த இயேசு சுவாமியின் அப்போஸ்தலர்கள் பேசுவது எல்லாருக்கும் புரியவேண்டும்” என்பதற்காக அன்று தீப்பிழம்பாக ஆர்ப்பாட்டமாக மூன்றாவது ஆளான பரிசுத்த ஆவியானவர் இறங்க வேண்டும் என்பது தேவையாக இருந்தது.
அன்று ஜெபித்தவர்களுள் முக்கியமான ஆள் நம் தேவ அன்னை. இன்னும் சொல்லப்போனால் மாதாவின் ஜெபத்தினாலே தூய ஆவியானவர் எழுந்தருளியிருப்பார். ஏன் அன்னைக்கு விண்ணகத்தில் எதுவுமே மறுக்கப்படுவதில்லை.
நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்..
அன்னையை ஒதுக்குவார்களாம்; தூற்றுவார்களாம்; அவர்கள் மத்தியில் தூய ஆவியானவர் வருவாராம். ஒரு கத்தொலிக்க பாட்டியிடம் இவர்கள் போய் பேசினால் வரும் பதில்“ விளக்குமாறு பிய்ந்துவிடும் அப்படியே ஓடிப்போய்விடு“.
நம்மவர்களும் அவர்கள் பின்னே ஓடுவார்களாம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம். நாம் ஏன் சொல்ல வேண்டும்? ஆண்டவர் சொல்லுவார்...
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!