♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே நல் ஆயனே எனை நடத்தும் நேயனே
நீர்நிலையின் அருகில் எனைச் சேருமே
இயேசுவே நல் ஆயனே நேயனே
நீர்நிலையின் அருகில் எனைச் சேருமே
1. பசுமையான நிலத்திலே நேய வழி காட்டுமே
குளிர்ந்த இடத்தில் இளைப்பாற்றி தாருமே (2) இயேசுவே...
பள்ளத்தாக்கில் இருப்பினும் நடக்க வழி காட்டுமே
ஒருபோதும் எனக்குப் பயம் இல்லையே (2) இயேசுவே...
2. உண்மையான நலன்களை உன்னிடமே காண்கிறேன்
என் கிண்ணம் நிரப்ப உனை அழைக்கிறேன் (2)
இன்னல்களின் நடுவிலே என்னை வழிநடத்துமே
உன்னுறவில் வளர அருள் தாருமே (2)