என் ஆயன் ஆண்டவரே 23

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆயன் ஆண்டவரே

இனி எந்நாளும் குறைவில்லையே (2)


1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற்றி

பரிவென்னும் அருவியில் பருகச் செய்தார் (2)

பலம் தந்து என்னைக் காத்திருந்தார் ஆ ஆ - 2

நேர் பாதையில் தினம் என்னை நடத்துகின்றார்


2. காரிருள் சூழும் கானகத்தைக்

கடந்திட நேரினும் கவலை இல்லை (2)

ஏனெனில் நீர் எனில் இருக்கின்றீர் ஆ ஆ - 2

நின் கோலும் தடியும் என்னைத் தேற்றும்


3. அயலவர் கண்டு அஞ்சிடவே

அருஞ்சுவை விருந்தொன்றை எனக்களித்தீர் (2)

அரவணைத்தென்னை வரவேற்றீர் ஆ ஆ - 2

அன்பால் நெஞ்சம் நிறையச் செய்தீர்