விண்ணும் மண்ணுமே கடவுள் 24

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்ணும் மண்ணுமே கடவுள் சொந்தம் என்றுமே

கடல் அடித்தளம் அமைத்து ஓடும் ஆறுகள் செய்தார்

ஆண்டவர் மலையில் ஏறத் தகுதி வேண்டுவோம்

அவர் திருத்தலத்தில் நிற்கும் உரிமை நாடுவோம் (2)


1. கறைபடாத கைகளும் நெஞ்சமும் பொய்

தெய்வங்களை வணங்காத இதயமும்

வஞ்சகத்தில் ஆணையிடா உள்ளமும் வீண்

வெறிதனிலே நடைபோடும் வாழ்வதுவும்

ஆண்டவரின் ஆசிர்பெறுபவர் அவரே மீட்பரவர்

மீட்பில் வலப்புறம் அமர்பவர் என் தேவன்

இல்லம் என்றும் வாழ்பவர் அவரன்றோ

வாயில் நிலைகளே உயர்ந்து நின்றிடுவீரே

மன்னர் வருகிறார் மாட்சியில் நுழைகிறார்


2. வலிமையாற்றல் மிகுந்தவர் ஆண்டவர்

போரில் வல்ல வீரனே ஆண்டவர்

நீதிநெறி வழுவாத மன்னரவர் மன்னிப்பு மறவாத அன்பர் அவர்

ஆண்டவரின் ஆசிர்பெறுவோம் நாமே மீட்பரவர்

மீட்பில் வலப்புறம் அமர்வோம் என் தேவன்

இல்லம் என்றும் வாழ்வோம் வாருங்கள்

வாயில் நிலைகளே உயர்த்தி நின்றிடுவோமே

மன்னர் வருகிறார் மாட்சியில் நுழைகிறார்