இறைவன் என் பாதைக்கு 26

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவன் என் பாதைக்கு ஒளியானவர் - 2

அவரே என் மீட்புக்கு வழியானவர்

யாருக்கு நான் இனி அஞ்சுவேன்?


1. ஆண்டவா நான் உம்மை வேண்டுவதோ

எந்நாளும் உன்னில்லம் குடிவாழவே

என் விருப்பம் ஒன்றேதான் நீ அறிவாயே

என்றென்றும் உன் இனிமை சுவைத்திட வேண்டும்

உன் ஆலயம் நான் பார்க்கணும்

என் கண்கள் உனை நாளும் தரிசிக்கணும் (2)


2. வாழ்வோரின் நாட்டில் நலம் பொழிகின்றாய்

நலம் யாவும் பெற என்னைத் தினம் அழைக்கின்றாய்

நலம் காணும் நம்பிக்கை தினம் விதைக்கின்றாய்

தானாகத் தழைத்திடவே எனை அழைக்கின்றாய்

உனை எதிர்பார்த்தேன் வல்லமையூட்டு

திடமான இதயத்தை எனக்களித்திடு (2)