♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கடல் அலையெனவும் அருளினை இறைவா
என்னகத்தே பொழிந்தருளும் (2)
1. உம் வாக்கு எந்தன் உறுதுணையாகும்
உம் அருளோ என்னுள் பொங்கி வழியுமே (2)
உண்மையின் பாதையை நான் கண்டேன் - 2
என்றும் உம்மையே நம்பினேன் ஆண்டவரே
2. தேனினும் இனியது உம்திருச் சட்டமே
மனதார அவற்றை நான் அன்பு செய்கின்றேன்
என்னிதியனுக்கு உம் நெறியை
என் இருகரம் குவித்து நான் வணங்கிடுவேன்