பாத்ரே பியோ எப்போதும் ஜெபமாலையும், கையுமாக இருக்கவே விரும்பினார். தந்தை மார்செல்லினோவின் சாட்சியத்தின்படி, பாத்ரே பியோ ஒரு முறைக்கு ஒரு கையை மட்டுமே ( இரண்டு கைகளிலும் ஆண்டவருடைய திருக்காயங்கள்) கழுவ அனுமதித்தார். ஒரு கையைக் கழுவும் முன் மறு கைக்கு தம் ஜெபமாலையை மாற்றிக் கொண்டார். அப்போது கூட ஜெபமாலையைக் கீழே வைக்க விரும்பவில்லை.
ஒரே ஜெபங்களைத் திரும்பத் திரும்ப ஜெபமாலையில் சொல்ல வேண்டியது பற்றி விமர்சனம் செய்தவர்களிடம் அவர் :
“ தேவ இரகசியங்களில் கவனம் செலுத்துங்கள், அவை ஒவ்வொரு பத்து மணிக்கும் மாறுகின்றன “ என்று கூறினார்.
ஜெபமாலை சொல்வதால் களைப்படையும் போது, சற்று நேரம் நிறுத்தி ஓய்வெடு, அதன்பின் மீண்டும் தொடங்கு “ என்று அவர் எனெடினா மோரி என்ற பெண்ணுக்கு ஆலோசனை தந்தார்.
“ ஜெபமாலை தற்காப்பு மற்றும் மீட்பின் ஆயும்தம் “
“ நரக எதிரியின் தந்திரங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக மாமரியால் நமக்குத் தரப்பட்ட ஆயுதமே ஜெபமாலை. சாத்தான் ஜெபமாலையை அழித்துவிட எப்போதும் முயல்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றி பெறவே மாட்டான். ஜெபமாலையை சரியாகப் பயன்படுத்துபவன் பெரும் போர்களிலும் கூட வெற்றி பெறுவான்.”
1954, பிப்ரவரி 6 அன்று இரவு 9 மணிக்கு பாத்ரே பியோ தந்தை கார்மெலோவிடம்:
“ நான் இன்று இன்னும் இரண்டு ஜெபமாலை ஜெபிக்க வேண்டியுள்ளது. இதுவரை இன்று 34 ஜெபமாலைகள் மட்டுமே ஜெபித்திருத்திருக்கிறேன். இரண்டையும் முடித்தபின் நான் படுக்கச் செல்வேன்.” என்றார்.
எப்படி இதை அவர் செய்கிறார் என்று கேட்கப்பட்டபோது “ இரவு என்பது வேறு எதற்கு இருக்கிறது? “ என்று அவர் பதில் சொன்னார்.
பூசைக்குப் பின் காலை ஏழு மணிக்கு லூசியா பென்னெல்லி!
“ இன்று இதுவரை எத்தனை ஜெபமாலைகள் சொன்னீர்கள் “ என்று கேட்டபோது,
“ நான் ஏற்கனவே ஏழு ஜெபமாலைகள் சொல்லி விட்டேன் “ என்றார் பியோ. மற்றொரு முறை அதே பெண்ணிடம் நண்பகல் நேரத்தில்,
“ இன்று நான் ஏற்கனவே 16 ஜெபமாலைகள் சொல்லிவிட்டேன். “ என்றார். தந்தை பியோ சொல்லி வந்தது அனைத்தும் 153 மணிகள் கொண்ட முழுச் ஜெபமாலைகள்.
பாத்திமாவில் நம் ஜெபமாலை இராக்கினி, தினமும் ஜெபமாலை ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை கூட அதை ஜெபிக்க விரும்பாதவர்கள், பாத்ரே பியோவின் முன்மாதிரிகையைக் கண்டு உண்மையாகவே வெட்கப்பட வேண்டும்..
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
“ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…
ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை….
சிந்தனை : ஒரு நாளைக்கு ஒரு ஐம்பத்து மூன்று மணிகள் ஜெபமாலையாவது குடும்பத்தோடு அமர்ந்து ஜெபிப்போம்.. தனியே வசிப்பவர்கள் 153 மணிகள் வரையாவது ஜெபிக்கலாம்.
“ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 36 ஜெபமாலைகளாவது ஜெபித்த ஆண்டவரின் ஐந்து காய வரம் பெற்றிருந்த தந்தை பியோவே… நாங்கள் ஒரு நாளைக்கு ஐம்பத்து மூன்று மணிகள் ஜெபமாலையாவது பக்தியோடு ஜெபிக்க வரம் தாரும்.."
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !