என் உள்ளம் கவியொன்று பாடும் அது என் தேவன் உன்னைத் தேடும் (2) தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர என் தேவன் உன்னில் வாழும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் உள்ளம் கவியொன்று பாடும்

அது என் தேவன் உன்னைத் தேடும் (2)

தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர

என் தேவன் உன்னில் வாழும்


1. மாநிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன்

மலர்களின் புன்னகையில் உன் எழில் நானுணர்ந்தேன் (2)

மழலைக் குழந்தை அழகினிலே மாந்தர் மனதின் அன்பினிலே -2

மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன்


2. நண்பர்களின் பண்பினிலே உன் நயம் நானுணர்ந்தேன்

பண்களின் இசையினிலே உன் சுவை நானறிந்தேன் (2)

பணிகள் ஆற்றும் கரங்களிலே

பகிர்ந்திடும் அன்பர் குணங்களிலே (2)

பரமனே உனைக்கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன்