ஆண்டவரே உம்மைப் புகழ்ந்திடுவேன் 30

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே உம்மைப் புகழ்ந்திடுவேன்

என்னைக் கைதூக்கி எடுத்துவிட்டீர் (2)


1. ஆண்டவரே உம்மை ஏத்திப் புகழ்வேன்

என்னைக் கைதூக்கிவிட்டீர்

என்னைக் கண்டு என் பகைவர்கள் மகிழ

நீர் என்றும் விடவில்லை

ஆண்டவரே நீர் என்னை பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர் -2


2. இறையன்பரே ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்

தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்

அவரது சினம் என்றும் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்

அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்குமே