ஆயர் தம் மந்தையைக் 31

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆயர் தம் மந்தையைக் காப்பது போல

ஆண்டவர் நம்மைக் காத்திடுவார் -2


1. மக்களினமே ஆண்டவர் வார்த்தை கேளுங்கள்

தொலைதூரப் பகுதிகளில் அதனை அறிவியுங்கள் (2)

ஏனெனில் யாக்கோபை ஆண்டவர் மீட்டார்

வலியவன் கையினின்று விடுவித்தார் -2


2. கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக்களித்திருப்பர்

அதுபோல இளையோரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர் (2)

அவர்களது அழுகையை நான் மிகழ்ச்சியாக்குவேன்

அவர்களுக்கு ஆறுதல் அளித்திடுவேன் -2