பழைய ஏற்பாட்டில்..
"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்; " (இசையாஸ் 7 :14)
புதிய ஏற்பாட்டில்..
தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார். (லூக்காஸ் 1 : 28)
அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். (லூக்காஸ் 1 : 30-31)
அதற்கு வானதூதர், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.(லூக்காஸ் 1 : 35)
பழைய ஏற்பாட்டில்..
“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.” (ஆதியாகமம் 3:15)
புதிய ஏற்பாட்டில்..
"விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்".(திருவெளி 12 : 1)
ஆதி அந்தமும் அவள்தான்.. நம்மை ஆளும் நீதியும் அவள்தான்..
பழைய ஏற்பாட்டில்.. (கருகாமல் எரிகின்ற முட்செடி மாதா கன்னி மற்றும் தாயின் அடையாளம்)
"ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார். அவன், முட்செடி வெந்து போகாமலே எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். (யாத்திராகமம் 3:2)
எசேக்கியேலில் கிழக்கு வாசல்.. (மாதாவின் கன்னிமை)
"பின்னர் அவர் கீழ்த்திசையை நோக்கியுள்ள தூயகத்தின் புறவாயிலுக்கு என்னைத் திரும்பவும் கூட்டி வந்தார்; அந்த வாயில் பூட்டப்பட்டிருந்தது. மூடப்பட்டே இருக்கும்
அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்; திறக்கப்படாது; யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்; ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்; ( எசேக்கியேல் 44 : 1-2)
பூட்டப்பட்ட தோட்டம் ( மாதாவின் கன்னிமை)...
“பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.” (உன்னத சங்கீதம் 4 : 12)
கெதயோனின் கம்மளம் ( மாதா கன்னி மற்றும் தாயைக் குறிக்கிறது)
“ நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுவேன்; பனி மயிரிலே மட்டும் பெய்து, பூமியெல்லாம் ஈரம் இல்லாதிருக்குமானால், நீர் சொன்னபடி இஸ்ராயேலை என் கையால், மீட்பேன் என்று அறிந்து கொள்வேன்" என்றான். அவ்வாறே நடந்தது.
அவன் இரவில் எழுந்திருந்து மயிரைப் பிழிந்து ஒரு சட்டி நிறையப் பனியை நிரப்பினான். மறுபடி கெதெயோன் கடவுளை நோக்கி,
"ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
அன்றிரவு அவன் கேட்டபடியே கடவுள் செய்தார்; ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மட்டும் பனி விழுந்திருந்தது. (நீதிபதிகள் 6 : 37-40)
யூதித்தின் முன்னறிவித்தல்.. “ அவர் இஸ்ராயேலுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை தம் அடியாளாகிய என்னைக் கொண்டு நிறைவேற்றியருளினார். எப்படியென்றால், அவர் இன்றிரவே தம் மக்களின் பகைவனை என் கையால் கொன்றுவிட்டார். என்று சொன்னாள்.” (யூதித் 13 : 18)
அகந்தையை அழிப்பாள்.. ஆற்றலைக் கொடுப்பாள்... அவள்தான் அன்னை மகாசக்தி.. அவர்தான் தேவமாதா…
மாதா கன்னி என்பதற்கு மேலும் ஒரு சான்று..
“அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி; அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்.” (ஞான ஆகமம் 7 : 26)
மாதா கடவுளின் தாய்.. அறிவிப்பவர் பரிசுத்த ஆவியானவர் :
“எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,
"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே. என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி? உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது. (லூக்காஸ் 1 : 42 – 44)
மாதாவை நாம் ஏன் புகழ வேண்டும்?
" இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே. ( லூக் 1 : 49)
மாதாவின் அருமை பெருமைககள் வேதாகமத்தில் இன்னும் அதிகமாகவே இருகிறது..
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம், ஜெபிப்போம் ஜெபமாலை....
நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !