♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன்
என்றும் இருக்கின்றார் (2)
1. கடவுளே உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்
உமது மேன்மைமிகு ஆற்றலினால்
எனது நேர்மையை நிலைநாட்டும் (2)
கடவுளே விண்ணப்பத்தைக் கேட்டருளும்
எனக்குச் செவிசாயும் (2)
2. இதோ கடவுள் எனக்கு என்றும் துணைவராய் இருக்கின்றார்
எனது வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார் (2)
ஆர்வத்தோடு உமக்கு பலிசெலுத்துவேன்
நன்றி செலுத்திடுவேன் (2)