♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வான்படைகளின் ஆண்டவரை
என் ஆன்மா விரும்பித் தேடுது (2)
அவர் ஆலய முற்றத்தை நாடி
என் உள்ளம் பேருவகை அடைகின்றது
1. அடைக்கலாம் குருவிக்கும் தகைவிலான் குருவிக்கும்
அடைக்கலமானீர் தங்க புகலிடமானீர் -2
பாலை நிலத்திலும் பள்ளத்தாக்கிலும்
மழை தந்தீர் நல்வளம் தந்தீர் -2
நீரே கண்மணியாய்க் காக்கின்றீர்
ஏழ்மையில் தோழனாய் இருக்கின்றீர்
உம்மை நம்புவோர் நல் ஆசி பெறுவார்
ஆவியிலும் உண்மையிலும் வழிநடப்பார்
2. உம் கோவில் முற்றத்தில் ஒருநாள் தங்குவது
ஆயிரம் நாளிலும் மேலானது -2
உமது பாதையில் பயணம் செய்வது
முடிவில்லாதது அது முழுமையானது -2
நீரே எம் கேடயமாய் இருக்கின்றீர்
நீங்காத நிழலாக தொடர்கின்றீர்
உம்மைப் பாடிப் புகழ்ந்திடுவோமே
அன்பிலும் நட்பிலும் நிலைபெறுவோமே