ஆண்டவர்க்குப் பாடல் இசைப்போம் 95

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர்க்குப் பாடல் இசைப்போம் இணையில்லாதவர்

தாழ்பணிந்து போற்றிப் புகழ தகுதியானவர்


1. வாருங்கள் புகழ் பாடுங்கள் ஆண்வரைப் போற்றுங்கள்

மீட்பின் பாறை நம் இறைவனை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்

நன்றியோடு அவர் முன்னே மகிழ்ந்து சென்றிடுவோம் -2

புகழ்ச்சி நிறைந்த பாக்கள் இசைத்து அவரைப் போற்றிடுவோம் - 2


2. ஏனெனில் அவர் ஆண்டவர் மாண்புமிகு இறைவன்

தெய்வங்கள் அனைத்திற்கும் உயர்ந்த பேரரசர்

மலைகளும் கடல்களும் படைத்தவர் அவரே-2

நம்மைப் படைத்த ஆண்டவர்முன் தாள் பணிந்திடுவோம் - 2