மனமென்னும் ஆலயம் உனதாக்கினேன் ஓடோடி வருவாய் அன்பே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மனமென்னும் ஆலயம் உனதாக்கினேன்

ஓடோடி வருவாய் அன்பே (2)

உனக்காக உயிர் வாழும் நிலை மாறினேன்

உறவாக நிலைப்பாய் அன்பே (2)


1. உன் இல்லம் எதுவென்று நான் தேடினேன்

என் உள்ளம் உனதில்லம் என்றே வந்தாய் (2)

உனதாகிடும் என் உயிர் வாழவே

உளம் வருகின்றாய் உணவாகவே

உடலோடும் குருதியோடும் தினம் வருகின்றாய்


2. என் இல்லம் நீ வாழும் வரம்வேண்டினேன்

உனைப் பகிர்ந்து உளம் வந்து உரம் ஊட்டினாய் (2)

பனிபோலவே எனை மாற்றினாய்

நற்கனிதருகின்ற மரமாக்கினாய்

கொடியோடு இணைகின்ற கிளையாகினேன்