வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா உள்ளதை எல்லாம் எடுத்துவந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று

தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா

உள்ளதை எல்லாம் எடுத்துவந்தேன் - அதில்

நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்

எனை ஏற்றிடுவாய் இறைவா உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்


1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே

எரியும் மெழுகென உருகி ஒளி தரவே (2)

என்னையே முழுவதும் தருகின்றேன் - எனை


2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே

நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே (2)

என்னையே முழுவதும் தருகின்றேன் - எனை