♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வெண்முடி சூடிய வேந்தனாம் இமயனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்களே
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமாம் மலையும் வாழ்த்துங்களே
1. வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்களே
தேனுறு நீரினைத் தென்னவர்க்களிக்கும்
பொன்னியும் பொருநையும் வாழ்த்துங்களே
இந்திய அன்னையின் எழிலுறு உடையாம்
வங்கமும் அரபியும் வாழ்த்துங்களே
2. இந்திய அன்னையின் எழிலடி வருடும்
இந்தியக் கடலே வாழ்த்துங்களே
3. குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும்
பாலையும் இறைவனை வாழ்த்துங்களே
அறிதமிழ் நிலமெலாம் நெறியோடு வாழ்ந்திடும்
அன்பர்கள் அனைவரும் வாழ்த்துங்களே