♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே
1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இன்று கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே (2)
2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்கு தொடர்ந்திடுமே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே (2)