மனம் மாறி வருகிறேன் நான்
எந்தன் வாழ்வை மாற்றும் இயேசுவே
1. ஆயன் உம்மைப் பிரிந்த ஆடாய் வாழ்ந்தேன்
அன்பர் உமைப் பிரிந்து ஊதாரியானேன்
2. இறைவார்த்தை நம்பாத காரணத்தாலே
இல்லத்திலே குழப்பங்கள் உருவாக்கினேன்
3. குடிவெறி பொருள் வெறித் தீமைகளாலே
குடும்பங்கள் சீர்குலையக் காரணமானேன்
4. சந்தேகம் வெறுப்பெனும் தீமைகளாலே
சந்தோச வாழ்க்கைதனை இழந்துவிட்டேன்