ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
1. உம்முடைய சன்னிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்
2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்
1. கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் - ஆமென்