உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக என்னில் வா என் மன்னவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

என்னில் வா என் மன்னவா - 3


1. நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்

துணையாளன் நீயல்லவா (2)

எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக

இணைகின்ற என் மன்னவா (2) இணைகின்ற என் மன்னவா


2. நிலம் வாழ நீராகி மலர்வாழ ஒளியாகி

நலம் சேர்க்கும் என் மன்னவா (2) என்

உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மணம் நல்கும்

இளந்தென்றல் நீயல்லவா (2) இளந்தென்றல் நீயல்லவா