புதிய பாதையில் புறப்பட்டுச் செல்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதிய பாதையில் புறப்பட்டுச் செல்வோம்

நானிலம் எங்கும் புதியதாக்குவோம்

பழையன களைவோம் பாதை மாற்றுவோம்

இயேசு கிறிஸ்துவில் புதுப்படைப்பாவோம் (2)


1. என் வழியாய் அல்லாமல் தந்தையிடம் வருவதில்லை

நானே வழியும் உண்மையும் உயிரும் என்றார் (2)

புனித பாதையில் வாழ்வை அடைந்திட -2

சென்றிடுவோம் புத்துலகம் படைத்திடுவோம் நாம் -2


2. வாழ்பவனும் நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்

அவர் துணையில் உலகம் எனக்கு குப்பையாகுமே (2)

இறைசாட்சியாய் வாழ்ந்து காட்டுவோம் -2

இறையரசை மண்ணுலகில் நிலைநாட்டுவோம் -2