♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒளியில் நடந்துவா சகோதரா
ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா
வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா (2)
இயேசு நம் ஒளி -3 (2)
1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை (2)
மீட்கும் தேவன் அவரன்றோ - 2
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ
2. அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை
அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை (2)
நிரப்பும் தேவன் அவரன்றோ - 2
இன்பத்தின் இறைவன் அவரன்றோ